மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை, இலங்கையின் ஒஸ்கார் றொமேறோராவார் என்று இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின் சமூக, அரசியல் வரலாற்று தளத்தில் தமிழின இனப்படுகொலை தொடர்பில் உண்மையைக் எடுத்துக்கூறி நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு என்பது தமிழினத்திற்கும் சர்வதேசத்திற்கும் என்றுமே ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும் என்றும் தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அத்துடன், ஜோசப் ஆண்டகை, மதங்களைக் கடந்து தமிழின விடுதலைக்காக, இலங்கை அரச அடக்கு முறைக்கெதிராக ஓங்கி ஒலித்த குரல் விடுதலை ...
Read More »குமரன்
விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது மிகவும் முக்கியம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது. காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ...
Read More »‘சிறிலங்காவின் பெயரை சிங்கலே” – என மாற்ற பௌத்தமதகுருமார் யோசனை
சிறிலங்காவின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பௌத்தமதகுருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். புதிய அரசமைப்பிற்கான யோசனைகளை சமர்ப்பி;த்துள்ள பௌத்தமதகுருமார்கள் குழுவொன்று நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பௌத்தமதகுரு ஒருவர் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்களமே உத்தியோகபூர்வ மொழியாக காணப்படவேண்டும், ருகுணு பிஹிட்டி மாயா என்ற அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More »சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா?
2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தனியொருவராட்சியின் கீழ் உள்ள நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாக, செல்வந்தமிக்க நாடுகளாக, வலிமை மிக்க நாடுகளாக உருவெடுக்க முயல்கின்றன. நான் பதவியில் இருக்கும்வரை அதை நடக்க அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்தார் பைடன். சீனாவின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, படைவலிமைப் பெருக்கம் ஆகியவை அடக்கப்பட வேண்டும்என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ...
Read More »வங்காளதேசத்தில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு
வங்காளதேசத்தில் இன்று 6,830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6,830 பேர் கொரோனா ...
Read More »கோகோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்
வீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி உள்ளார். தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் ...
Read More »திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினம்
இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், குறித்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து வெளியிட்டள்ள அறிக்கையில்,”மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு ...
Read More »ஐ.நாவில் போர்க்கொடி தூக்கத் தயாராகும் ரணில்
அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ் – சிங்கள புத்தாண்டில் பச்சை நிற ஆடையணிய வேண்டும் என கேட்டுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.மேலும் அவர் குறிப்பிடும் போது; உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவு குறித்து செவ்வாய்க்கிழமை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை ...
Read More »புலமைப்பரிசில் ஆசிரியர் அன்பழகன் காலமானார்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வே.அன்பழகன் இன்று காலை கொழும்பில் காலமானார். உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அன்பொளி கல்வியகத்தில் கல்விபயில்வதற்காக ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் ...
Read More »பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி ...
Read More »