குமரன்

இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு

பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து எங்களின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்ய அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...

Read More »

ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினா கசண்ட்ரா, தற்போது ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காண்பித்து வருகிறார். கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா கசான்ட்ரா தயாராகி வருகிறார். இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். கொரியன் மொழியில் உருவான ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற ...

Read More »

சட்டத்தை மீறி திருமண வைபவத்தை நடத்திய மணமக்கள்

சுகாதார சட்டங்களை பின்பற்றாமல் நடத்திய திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து புத்தளம் கொஸ்வத்தை மெதகிரிமிட்டியான கிராம சேவகர் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மெதகிரிமிட்டியான பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 9 ஆம் திகதி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் சுகாதார சட்டங்களை மீறி 140 பேர் கலந்துக்கொண்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு ...

Read More »

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பல்வேறு கட்டுப்பாடுகள்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன அறிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும். முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.

Read More »

நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து: நான்கு பேர் காயம்!

நியூஸிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளனர். தெற்கு தீவின் மத்திய டுனெடினில் உள்ள கவுண்டவுன் பல்பொருள் அங்காடியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘தாக்குதலின் பின்னணியில் உள்ள உந்துதல் தெளிவாக இல்லை, ஆனால் இது ஒரு உள்நாட்டு பயங்கரவாத ...

Read More »

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Read More »

இனப்படுகொலையா? இல்லையா

கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது. கடந்த மாதம் 24ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். 1915ஆம்ஆண்டு ஏப்ரல்24இலிருந்து தொடக்கி சுமார் பதினைந்து இலட்சம் ஆர்மீனியர்கள் துருக்கிய ஒட்டோமன் பேரரசால் கொல்லப்பட்டார்கள், அல்லது பலவந்தமாக நாடுகடத்தப்பட்டார்கள். சுமார் ஒரு நூற்றாண்டின் பின் அமெரிக்கா அதை ஓர் இனப்படுகொலை என்று இப்பொழுது அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனி அவ்வாறு ...

Read More »

சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய அரசாங்கம் அந்த வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்றுக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் கோவிட் 19 வைரஸ் என மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் உண்மையில் தற்போதே இலங்கை கோவிட் வைரஸ் தொற்றை கூடுதலாக எதிர்நோக்கி ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவார்களாம்!

கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். கோவிட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் கட்டுப்பாட்டுக்காக ...

Read More »

மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்ட ரகசிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியது. அதன் தாக்கம் தற்போதும் குறையவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தற்போது வேகமாக உள்ளது. சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இந்நிலையில், சார்ஸ் கொரோனா ...

Read More »