தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினா கசண்ட்ரா, தற்போது ஆக்ஷன் பயிற்சியில் தீவிரம் காண்பித்து வருகிறார்.
கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா கசான்ட்ரா தயாராகி வருகிறார்.

இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். கொரியன் மொழியில் உருவான ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்துக்காக இருவரும் கராத்தே உள்ளிட்ட முக்கிய ஆக்ஷன் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
Eelamurasu Australia Online News Portal