இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம். இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என ...
Read More »குமரன்
சிறிலங்காவில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம்
சிறிலங்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் பதிவாகிய 221 மரணங்களில் 54 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். அதில் 22 மரணங்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று உறுதி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டால் எதிர்வரும் வாரத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
Read More »கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து
கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சிறிலங்கா கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. கப்பலில் உள்ள இரசாயணங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார். கப்பலுக்குள் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கப்பலின் 1,487 கொள்கலன்கள் ...
Read More »கிறிஸ்மஸ் தீவிலுள்ள தமிழ் குடும்பத்தின் விடுதலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கிறிஸ்மஸ் தீவில் குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கையாளரான பிரியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் தெரிவித்துள்ளார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்ற நிலையில், பிரியா அவரது கணவர் நடேஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளான கோபிகா, தருணிகா ஆகியோர் கடந்த பல மாதங்களாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தனது தங்குமிடத்திற்கு வந்த காவலாளி ஒருவர் ...
Read More »ராமாயண கதையில் ராவணனாக நடிக்கும் ரன்வீர் சிங்
பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், ராமாயண கதையில் ராவணனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மகாபாரத கதையையும் மலையாளத்தில் படமாக்க உள்ளனர். தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். சீதையாக நடிக்க கீர்த்தி சனோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரூ.500 கோடி செலவில் ...
Read More »ஆதரித்து வாக்களித்த அ.இ.ம.கா உறுப்பினர்கள் இருவர் மீதும் விசாரணை
20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படவுள்ளது. ;கட்சியின் அரசியல் ; உயர்பீடம் நியமித்த, சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டின் தலைமையிலான மூவர் கொண்ட ஒழுக்காற்றுகுழு அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசாரிக்க தீர்மானித்துள்ளது . ;நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமகவே இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் மிக விரைவில் குறித்த விசாரணைகள் இடம்பெறும் எனவும், ஒழுக்காற்றுக்குழுவின் ...
Read More »12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி பலனளிக்கிறது – மாடர்னா நிறுவனம்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரசை ஒழிக்க உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. எனினும் உலகளாவிய தடுப்பூசி வினியோகம் இன்னும் இறுக்கமாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கே உலகின் பெரும்பகுதி போராடி வருகிறது. அதேவேளையில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் ...
Read More »அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் எதுவும் இல்லையாம்!
இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது. அத்துடன், கொழும்பில் ...
Read More »இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம்
இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் ...
Read More »கொரோனாவால் இறப்போரில் அதிகளவானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
கொவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும் சதவீதமானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணரும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளருமான மருத்துவர் விந்தியா குமாரபெலி தெரிவித்துள்ளார். நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோர் குறித்து சுகாதார அமைச்சு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கு மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் கிளினிக்குகள் மூலம் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது ...
Read More »