குமரன்

அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?

2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது.   பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாராளுமன்றத்தில் கொந்தளிப்பான ஒரு அமர்வில் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி சபைக்குள் அமர்ந்திருந்து நேரடியாகவே கண்டார். தற்போது அவர் அனுபவிக்கின்ற மூன்று அதிகாரங்களைத் தவிர தனது ஏனைய சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அந்த திருத்தச்சட்டம் அவரிடமிருந்து நீக்கிவிட்டது. தூதுவர்களை ...

Read More »

தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஓரங்கட்டுகிறது!

தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது மக்களுடன் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வும் இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டக் கூடிய ...

Read More »

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில் இரும்பு கம்யினால்  கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது. மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு  அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளதாக முன்னாள் வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து அவர் நேற்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.   இது குறித்து மேலும் ...

Read More »

சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்றார் விஜய்!

ஐஏஆர்ஏ என்ற நிறுவனம் நடத்திய சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் நேரில் சென்று பெற்றிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ...

Read More »

பிரெக்சிட் விவகாரம்!-வெற்றி பெற்றார் தெரசா மே!

பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், ...

Read More »

ஆஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது!

ஆஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை, 2017 மற்றும் 2018க்கு இடையே மும்மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கைப்படி, 2017-18 நிதியாண்டில் 9,315 சீனர்கள் பாதுகாப்பு விசா (Offshore Protection Visa) கோரி விண்ணப்பித்துள்ளனர்.  இதுவே, கடந்தாண்டு 2,269 சீனர்கள் மட்டுமே பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இந்த அடிப்படையில், தஞ்சம் கோரி விண்ணப்பித்த சீனர்களின் எண்ணிக்கை 311 சதவீதம் அதிகரித்துள்ளது.  திடீர் அதிகரிப்பு ஏன்? ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் மற்றும் சுற்றுலா விசாவில் வரக்கூடிய பல சீனர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பது இந்த திடீர் ...

Read More »

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க நாட்டில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார்களை கூறினர். ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லி விடப்போவதாக மிரட்டியதாக ...

Read More »

புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!

புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் ஒன்றுக்கு ஒரு லட்சம் டொலர்களை அவுஸ்திரேலிய அரசு ஈரானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுககு நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் குறித்த குடும்பத்தினர் இருந்த நிலையில் நடத்தப்பட்ட முறை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து நியூசவுத் வேல்ஸ் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் தடுப்பு முகாம்களில் அனுபவித்த மற்றும் பார்த்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு புகலிடம் கோரி ஈரானிலிருந்து வந்த குறித்த குடும்பம் 2010-2011 வரையான காலப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவு, ...

Read More »

சம்பந்தன், விக்னேஸ்வரன் இணைத்தலைமை காலத்தின் தேவை!

கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் காலை 11.50 மணிக்கு, யாழ். நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிக் கொள்வதற்காக, சனத்திரள் கூடியிருந்தது. குறித்த நேரத்தில் ரயில் கிளம்பியது. எமது பயணம், இரண்டாம் வகுப்புப் பெட்டியில் தொடர்ந்தது. அதில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தனது இரண்டு பாதுகாவலர்களுடன் பயணித்தார். எமக்கு அருகில் இருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விக்னேஸ்வரனுடன் கதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அது போலவே, கதைத்தும் விட்டார். விக்னேஸ்வரனுடன், அந்த நபர் என்ன கதைத்தார் ...

Read More »

96 பட ரீமேக்கில் பாவனா

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் பாவனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வெளியாகி ஒரு மாதத்தில் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போதும் திரையரங்கில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு நல்ல போட்டி இருந்தது. படத்தை தெலுங்கி ரீமேக் செய்யும் பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கன்னடம் மற்றும் இந்தி ...

Read More »