அவுஸ்திரேலியா மற்றும் பிரான்சுக்கு இடையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று ஜேர்மனியில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதறது. ஹம்பேர்க் நகரில் முடிவுற்ற ஜி – 20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸில் தயாரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் உள்ள ஷேர்பொக் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அங்கு நீர்மூழ்கிக் கப்பல் செயற்திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாகவும் ...
Read More »குமரன்
டிஜிட்டல் அலுவலகம்: இனி அலுவலகம் போக வேண்டாம்
வேலைவாய்ப்புகள் சொற்பமாக இருக்கும் காலகட்டத்திலும் திறமையான ஊழியர்களுக்கான தேவையும் எப்போதும் நீடிக்கவே செய்கிறது. சிறந்த திறன்கொண்ட ஊழியர்கள், அவர்களது வசதிக்கேற்ப பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கப் பல்வேறு சாத்தியங்களை மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இணைய வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் ‘எங்கிருந்தும் வேலை செய்யலாம்’ என்ற சூழ்நிலை உலகமெங்கும் உருவாகி வருகிறது. வேலை செய்பவர்களே எங்கே, எப்போது, எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை இதில் தேர்வு செய்துகொள்ளலாம். வீட்டிலிருந்து அரக்கப்பரக்கக் கிளம்பி, சம்பிரதாய அலுவல் உடைகளுடன் அலுவலகத்துக்கு வந்து நாளின் பெரும்பகுதி நேரத்தையும், ...
Read More »அவதூறு வழக்கு: சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரும் விடுவிப்பு!
பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் ...
Read More »பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்
இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. அரைஇறுதியின் ...
Read More »காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம்! -சம்மந்தன்
காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அவர், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். ...
Read More »கைரேகை ஸ்கேனர் கொண்ட ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்
ZTE நிறுவனம் கடந்த மாதம் ஸ்மால் ஃபிரஷ் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது பிளேட் தொடரில் அதன் புதிய ஸ்மார்ட்போனான பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதுவரை இந்த கைப்பேசியின் விலை விவரங்கள் பற்றி நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டில் ZTE பிளேட் வி7 மற்றும் ZTE பிளேட் வி7 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு பிறகு, ZTE ...
Read More »ஈழத்தமிழ் பொறியியலாளர் அவுஸ்திரேலியாவில் சாதனை!
மெல்பேர்ணை சேர்ந்த Shan Kumar அவர்கள் இவ்வாண்டுக்கான பொறியியல் துறையில் சிறப்புத்தகமை கொண்ட வல்லுநர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். The flagship publication of Engineers Australia, create magazine, is profiling Australia’s Most Innovative Engineers in its July edition. More than 200 engineers either nominated themselves or were nominated by peers for inclusion in the list. These entries were examined by a panel of judges and 30 engineers ...
Read More »துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையும் கக்கும் ! -கப்டன் வானதி
ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் சொல்லாது எமக்கென புதுவழி வகுத்துக் கொண்டு சிறப்பாகச் சொன்னால் அது புதுமை. இப்படி தனக்கொரு வழிகண்டு அதை கவியாய் தந்தவள்தான் கப்டன் வானதி. கப்டன் வானதி யாழ் தொழிநுட்பக் கல்லூரியிலிருந்து தன்னை தமிழீழ விடுதலைக்காக இணைத்துக் கொண்டவர். நெருக்கடிகளில் உறுதியுடன் மனோபலமும் கொண்டு போராடிய கப்டன் வானதியின் கவிதைகள் காலத்தால் அழியாதவை. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆனையிறவுப் பெருந்தளம் மீது 1991 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமரில் வீர காவியமான கப்டன் வானதி ...
Read More »இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு
யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று ...
Read More »15000mah இரட்டை USB மற்றும் டிஜிட்டல் காட்சித்திரை
தகவல்தொழில்நுட்ப துணைப்பொருட்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்புப் பொருட்களில் இந்தியாவின் முன்னணி விநியோகஸ்தரான ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15000 Mah ஆற்றல் கொண்ட தனது பாக்கெட் அளவுள்ள புதிய ‘ZEB MC15000PD பவர் பேங்க்கினை’ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கைக்கு அடக்கமாக, ஸ்டைலான மற்றும் கச்சிதமான தோற்றத்தைக் கொண்ட இந்த பவர் பேங்க் உங்களது சாதனங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் மின்னூட்டம் செய்திடும், மேலும் இதில் கூடுதலாக உள்ள எல்.இ.டி ஒளியுடைய டார்ச் அனைத்துவிதமான அவசரக்காலத்திலும் ஒளியினை வழங்கிடும். இது அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்யவும், ...
Read More »