குமரன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை! மீண்டும் விசாரணைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல் துறை  மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் ...

Read More »

வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- டிரம்ப்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்- தெருக்களில் உலாவந்த முதலைகள்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ...

Read More »

தொலைவாகும் தமிழர்கள்…!

யாழ்ப்­பா­ணத் தமி­ழர் மத்­தி­யில் நில­வி­வ­ரும் அபிப்­பி­ரா­யங்­க­ளில் ஒன்று யாழ்ப்­பா­ணம் இலங்­கைத் தீவின் தலை என்­பது. தலைப் பகு­தி­யில் வாழ்­ப­வர்­கள் நாட்­டின் போக்­கைத் தீர்­மா­னிப்­பர் என்று தமி­ழர்­கள் நினைக்­கின்­ற­னர். இது சற்று அப­ரி­மி­த­மான கற்­பனை என்­ப­தைத்­தான் கடந்த 70ஆண்­டு­கள் நிரூ­பித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் 100வீதத் திற­மை­யை­யும் கொழும்­பு­டன் ஒப்­பி­டும்­போது 15வீத அடை­வு­கூட இல்லை. தென் னிந்­தி­யா­வில் இருந்து ஆரம்­பக் குடி­யி­ருப்­பு­கள் நிகழ்ந்­த­போது பூந­கரி, மன்­னார்ப் பகு­தி­க­ளுக்கு ஊடா­கவே மக்­கள் இலங்­கைத் தீவுக்­குள் நுழைந்­த­ தற்­கான ஆதா­ரங்­கள் உண்டு. ஆதி மக்­கள் நீர் நிலை­களை அண்­மித்தே தமது ...

Read More »

எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது!-மம்தா பானர்ஜி

உச்ச நீதிமன்றம் உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது என மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை அதிகாரி  ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளூர் காவல் துறை அதிகாரி  தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுகாவல் துறை அதிகாரி   நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ...

Read More »

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்! -பாதுகாப்பிற்கு 390 பில்லியன்!

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி  அரசாங்கத்தின் மொத்த செலவினம் ,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்,  அதிகபட்சமாக பாதுகாப்பு அமைச்சுக்கு, 390.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, உள்நாட்டு விவகார மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு, 290.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 13.55 பில்லியன் ரூபா, அதிபர் செயலகத்துக்கும், 1.62 பில்லியன் ரூபா பிரதமர் செயலகத்துக்கும், 950 மில்லியன் ரூபா எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்துக்கும், நாடாளுமன்றச் செலவினங்களுக்கு, 3.58 பில்லியன் ...

Read More »

வாள்வெட்டுக்குழு யாழில் மீண்டும் அட்டகாசம்!

யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று  இரவு 10 மணியளவில் உட்புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டினுள் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு , வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு , வீட்டு வளவில்  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கி விட்டு தப்பி ...

Read More »

ஏமாற்று அரசியல்!

ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொருத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது. ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை. மாறாக நாட்டு மக்களைத் துண்டாடி, பல்வேறு பிரிவுகளாக்கி அவர்களை அழிவுசார்ந்ததோர் எதிர்காலத்தை நோக்கி ...

Read More »

அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடல்!

இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் வான்படை தளபதி ரிட்சர் ஓவென் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியாவின் தமிழக மற்றும் புதுச்சேரி கடற்படை பிரதானி அலோக் பட்நகரை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஏதிலி முகாம்களில் வசிக்கின்றவர்களும், இலங்கையில் இருந்து புதிதாக செல்லும் சிலரும் அங்கிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அவர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி முதல் ...

Read More »

லெஜண்டுகளின் ராகங்கள்!

சரிகம கர்வான் சமீபத்தில் சரிகம கர்வான் மினி என்ற கைக்கு அடக்கமான மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இசை ஜாம்பவான்களான எம் எஸ் விஸ்வநாதன், டிகே ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் பிரபலமான 351 தமிழ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புளூடூத், யுஎஸ்பி, எப்எம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. விலை ரூ.2490. எலெக்ட்ரானிக் கமாண்டர் லாகிடெக் நிறுவனத்தின் புதிய ஹார்மோனி எலைட் யுனிவர்சல் ரிமோட் மூலம் நம்மிடமுள்ள எல்லா எலெக்ட்ரானிக் பொருள்களையும் கட்டுப்படுத்த முடியும். தொடுதிரை வசதி உள்ள இந்த ரிமோட்டுடன் ...

Read More »