அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், 2008ஆம் ஆண்டு, ...
Read More »குமரன்
பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில்!
அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சியான லேபர் கட்சியை விட மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு பின்தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக் கணிப்பினை விடவும் லேபர் கட்சி ஒரு புள்ளியால் முன்னேற்றம் அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதேவேளை மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக மால்கம் டர்ன்புல் தொடர்ந்து முன்னேற்றம் ...
Read More »யாழில் மரங்கள் நட இராணுவத்துக்கு அனுமதியில்லை!
யாழ்.நகரைப் பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஜுன் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள மரநடுகைத் திட்டத்தில், இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று (28) நடைபெற்றது. அதில் சபை உறுப்பினர் வி.மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Read More »வடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி ஜூன் 12 பேச்சுவார்த்தை!
ஜூன் 12-ந் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட திகதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் திகதி சந்தித்து பேச முடிவு ...
Read More »ஜான்வியை பார்க்க கூடிய ரசிகர்கள் – அத்துமீறியதால் பரபரப்பு!
ஜான்வி கபூர் நடிப்பில் தடக் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், பாதுகாவலர்கள் இன்றி வெளியே சென்ற ஜான்வியை பார்க்க கூடிய ரசிகர்கள் அத்துமீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இவர் மராத்தியில் வரவேற்பை பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்திருக்கிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குடும்பத்தினர் இல்லாமல் ...
Read More »யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் கடந்த வாரம் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், படுகொலையைக் கண்டிக்கும் படங்களுடன் கூடிய பாதாகைகைளைத் தாங்கியிருந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
Read More »யாழ்ப்பாணத்தில் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்று 12 பேர் …..!
‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 12 பேர் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிகப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்று யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி மருத்துவர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். ‘‘பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட் டுள்ளனர். அவர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போதைய காலநிலை இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. 2008 ...
Read More »யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்றவரை காணவில்லை!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் கொடிகாமம் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என்பவரே இவ்வாறு காணமால் போயுள்ளார். கடந்த 21 ஆம் திகதி கொழும்பிற்கு செல்வதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அயர்லாந்து முடிவு !
அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவாக 66 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து ...
Read More »இருமுகத்தோற்றம்!
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டை அரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும் அமைதி–சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. அந்த தினம் நேர் முரணான இரு முகத்தோற்றங்களைக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அது யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் வடக்கிலும்–கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் மனங்களிலும் அந்த தினம் ஆழ்ந்த துயரத்தைத் தரும் ஒரு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal