செய்திமுரசு

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் தீயுடன் சங்கமம்

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (26) உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இவர் உயிரிழந்தார். இன்று (27) இறுதி நிகழ்வு பொன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது அவரது திருவுடல் .திருவடிநிலையில் தீயுடன் சங்கமமாகியது. கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் படையினரின் வாகனம் இவரை மோதியது. ...

Read More »

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்!

உலகம் வெட்கித்தலைகுனியக்கூடிய அளவுக்கு இலங்கையில் ஒரு பாரிய இன அழிப்பு நடைபெற்றது, இந்த உண்மைகளை தேசிய ரீதியில் கண்டறிய முடியாது எனவே இவ்விடயத்தில் சர்வதேசம் ; தீவிரமாக ஈடுபட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விடயங்களை கொண்டு செல்லப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார் ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலைமை வகித்திருந்தாலும் இந்தியா இம்முறை கனதியான செய்தியை இலங்கைக்கு சொல்லியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ...

Read More »

யாழ். புத்தூரில் அகழ்வாரய்ச்சி……

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில் ; இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

முடக்கப்படுகிறது யாழ். மாநகரின் மத்திய பகுதி

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கும் காரணத்தால் யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா கட்டுபாட்டு செயலணி அறிவித்துள்ளது இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், அதனால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும். யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் ...

Read More »

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின்!

 தொல். திருமாவளவன் பேட்டி விசிக தலைவர் திருமாவளவனை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தபோது இரவு சரியாக 12 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் வரிசை கட்டி நிற்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத சிலர் ஆவேசமாக அவரிடம் முறையிடுகின்றனர். பொறுமையாகப் பேசி ஆற்றுப்படுத்துகிறார். திருமாவளவனின் முகம் மட்டுமின்றிக் கை, கால்களிலும்கூட வீக்கத்தைக் கவனிக்க முடிந்தது. “நேரத்துக்குச் சாப்பிடறதும் இல்லை; ஒழுங்கா ஓய்வு எடுக்கிறதும் இல்லை; நேற்று தூங்கப் போகும்போது அதிகாலை நாலு மணி; இன்னைக்கும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை; ...

Read More »

மியான்மரில் 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம்

மியான்மரில் பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் குழு கூறுகிறது. பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு ...

Read More »

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான ஸ்ரீதரனால் இது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதன்போதே ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய எம்.பிக்கள் இந்த தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர். அத்துடன் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத் ...

Read More »

திருநெல்வேலியில் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 44 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ...

Read More »

உடல் குறைப்பாட்டுடன் இந்திய தம்பதிக்கு பிறந்த குழந்தை: நாடுகடத்தும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரான வருண் கட்யால் ஐரோப்பிய சமையல் குறித்து கற்பதற்காக ஆஸ்திரேலியா சென்று பின்பு ஆஸ்திரேலியாவிலேயே தனது பணி வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார். இந்தியரான ...

Read More »

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை ...

Read More »