Tag Archives: ஆசிரியர்தெரிவு

தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு சரியானவர் தெரிவாகும் வரை தலைவர் பதவியில் இருந்து தற்போதைக்கு ரணில் விலகுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளதாக சிங்கள இணையத் தளம் ஒன்று தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த இணையத் தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்து இருக்கக்கூடிய தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக ரணிலை நாடாளுமன்றம் செல்லுமாறு பலரும் கோரி உள்ளதாகவும், அதனை அவர் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனவரி வரை அவர் ...

Read More »

துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்றது. இதன்போது, விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் ...

Read More »

சிறிலங்காவில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மகுல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. பதவியேற்புக்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகியிருந்தன. இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள 26 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டது. மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம் கொழும்பு மாவட்டம் – பிரதீப் உதுகொட கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான களுத்துறை மாவட்டம் – சஞ்சீவ எதிரிமான்ன கண்டி மாவட்டம் – வசந்த யாப்பா பண்டார மாத்தளை மாவட்டம் ...

Read More »

இலங்கையில் அங்கீகாரமளிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கே அனுமதியாம் !

இனிவரும் காலங்களில் மக்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீககாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறல்லாத பட்சத்தில் அவர்களின் தொடர்பாடல் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இனிவரும் காலத்தில் மக்கள் தமது தேவைகளுக்கென சிம் அட்டைகள் மூலமான தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் போது, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ...

Read More »

ஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது: உண்மையான ஒற்றுமைக்கான அழைப்பு எனின், கொள்கை அடிப்படையில் தங்களை திருத்திக்கொண்டு அந்த அழைப்பை விடவேண்டும். ஆனால் வெறுமனே மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் வாள்வெட்டுத் தாக்குதல். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் மக்கள் சந்திப்பு நிறுத்தம்!

இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி ருவிட்டர் பதவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read More »

‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை

மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது. மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாணத்தில் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய கருணையின் அடிப்படையில் அனுமதி

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள உடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியிருந்த 31 வயது சய்தரா சங்கர், கடந்த மார்ச் 20ம் தேதி கொரோனா சூழல் காரணமாக ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டதால் ஆஸ்திரேலிய திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.  இந்த தடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கொண்டவர்களும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைக் கொண்டவர்களும் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்ற சய்தரா சங்கர் ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படவில்லை. “தனது கணவனிடமிருந்து நான்கு வயது மகனிடமிருந்தும் பிரிந்திருப்பதை ...

Read More »

நியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. உலகளவில் இதுவரை 1,98,11,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,29,661 பேர் உயிரிழந்துள்ளனர். வளர்ந்த பொருளாதாரமும், வலுவான சுகாதார கட்டமைப்பும் உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததையடுத்து, நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வருபவர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் அவர்கள் ...

Read More »