பூஸா சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின் குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஒரு தாக்குதல் தொடர்பில் இக்கைதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்கொலைக்கு முயன்ற காரணம் இன்னும் வெளியிடப் படவில்லை எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் கூறினார்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி குறித்த முடிவை பல்கலைகழகமே எடுத்தது!
யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்கும் அரசாங்கத்திற்கும் எந்ததொடர்பும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் அரசாங்கம் எந்த கொள்கை தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிக்கும் முடிவையும் பின்னர் அதனை மீள உருவாக்குவது என்ற முடிவையும் யாழ் பல்கலைகழக நிர்வாகமே எடுத்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read More »இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம்! -நேபாள பிரதமர்
இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார். இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இருந்து விஹாரி, பும்ரா விலகல்
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர். இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்களை அடிலெய்டில் தனிமைப்படுத்த முடிவு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் முன்னணி வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி முதல் 21-ந்திகதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க 1,270 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் அடுத்த வார இறுதியில் வர உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தங்குவதற்கு மெல்போர்னில் ஓட்டல் அறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் 50 ...
Read More »சிறிலங்கா பிரதமரின் ஊடகப் பணிப்பாளர் கைது
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் இருவரை முட்டிமோதி காயப்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அவர் மதுபோதையில் இருந்தார் என நவகமுவ காவல் துறையினர் தெரிவித்தனர். எனினும், சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேநேரம் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விஜயானந்த ஹேரத் தனது சொந்த வாகனத்திலேயே இருந்துள்ளார் என்றும் ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்
மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார். யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு 3.30 மணிக்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார். இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Read More »நியூசிலாந்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா
நியூசிலாந்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது: “ நியூசிலாந்தில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள நாட்டில் எவருக்கும் கரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்படவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்தவர்களுக்குத்தான் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் கண்டறிப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »சீனாவின் கரோனா தடுப்பு மருந்துக்கு ஜோடார்ன் அனுமதி
சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துக்கு ஜோர்டான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜோர்டானின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் நிர்வாகம் தரப்பில், “அவசர நிலையைக் கருத்தில் கொண்டு சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தை வாங்க அனுமதி வழங்கப்படுகிறது. பைசர் கரோனா தடுப்பு மருந்துக்குப் பிறகு நாங்கள் அனுமதிக்கும் இரண்டாவது கரோனா தடுப்பு மருந்து இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் கரோனா பரவலில் இரண்டாம் கட்ட நிலை தொடர்வதால் அங்கு கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும்
யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி யாழ்பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து சங்கங்கள் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகள் போல பல்கலைகழக நிர்வாகமும் துணைவேந்தரும் செயற்பட்டிருப்பது ஆழந்;த விசனத்தை ...
Read More »