மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு 3.30 மணிக்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.

இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Eelamurasu Australia Online News Portal