பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ரத்து செய்யப்படுவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி ராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர் 2 அரசு கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார். ஆளுநர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேசம் விரைவில் வழங்க வேண்டும்!
இலங்கையில் எட்டு மாவட்டங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்க்கமான நீதியை சர்வதேசம் விரைந்து வழங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி நாளைமறுதினம் 30 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் அமைதியான முறையில் பாரிய பேரணி ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை அலுவலகம் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். இந்த அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. எமது எதிர்ப்பின் ...
Read More »முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்கிறார்!
சமீபத்தில் பதவி விலகிய ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று ...
Read More »குயின்ஸ்லாந்தில் முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள குடியேற்றவாசிகள்!
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை மீட்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதலைகள் நிரம்பிய டையின்பொரஸ்ட் என்ற சதுப்புநிலக்காட்டிற்குள் அகதிகள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட குழுவினருடன் இணைந்து அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 15 பேரை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் டெயின்டிரீ ஆற்றுபகுதியில் படகொன்று தடுமாறிக்கொண்டிருப்பதை பார்த்த உள்ளுர் மக்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். படகு தரைதட்டியுள்ள பகுதி முதலைகள் நிறைந்தது என்பதால் அதில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்
Read More »தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு தொடர்கின்றது!- பார்த்திபன்
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இரத்தமின்றி சத்தமின்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலமும் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள் விழுங்கப்படுகின்றன. பூர்விகமாக ...
Read More »தலைவர் பிரபாகரனின் உடலில் சீருடையை நீக்க உத்தரவிட்ட பொன்சேகா!
“விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சசிகலகே , “பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார். பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார். இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் ...
Read More »அமெரிக்க தேசிய கொடிக்கு தவறான வண்ணம் கொடுத்த டிரம்ப்!
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றிருந்த டிரம்ப், அங்கு குழந்தைகளுடன் தேசிய கொடி வரையும் போது தவறான வண்ணத்தை கொடுத்தது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய கொடியில் 7 சிவப்பு கோடுகள், 6 வெள்ளை கோடுகள் என மொத்தம் 13 கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் அமெரிக்கா உருவான போது இருந்த 13 மகாணங்களை குறிக்கும். மேலும், இடது ஓரத்தில் நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். இது, தற்போது உள்ள 50 மாநிலங்களை குறிக்கும். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ...
Read More »ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரி ஜுலி பிஷப் ராஜினாமா!
ஆஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜுலி பிஷப், வெளியுறவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது ...
Read More »கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா!
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் ...
Read More »இன்டெல்லின் புதிய சாதனை, ‘சில்லு’!
உலகிலேயே மிக அடர்த்தியான, எஸ்.எஸ்.டி எனப்படும், ‘சாலிட் ஸ்டேட் டிரைவ்’ ஒன்றை இன்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய அளவுள்ள இந்த டிரைவ், 32 டெரா பைட் அளவு தகவல் கொள்திறன் கொண்டது. பெரும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வைக்கும், ‘டேட்டா சென்டர்’கள் முதல் இணையத்திற்கு பாலமாக இருக்கும் பிரமாண்ட, ‘சர்வர்கள்’ வரை அடியோடு மாறப்போகின்றன. இந்த மையங்களில், சர்வர்கள் ஏராளமான இடத்தை அடைத்தபடி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சி, அதிக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருப்பவை. இந்த வெப்பத்தை தணிக்கவே நிறைய செலவு செய்யவேண்டும். இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் ...
Read More »