பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்” என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம்!
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்வேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கர் குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பில் இலங்கை தீர்வு காணவேண்டிய விடயங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கான மரியாதைகள் ஆகியவை பரஸ்பரவ வலுவூட்டும் நோக்கங்களாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான எமது நடவடிக்கைளின் போது அப்பாவி மக்கள் பாதிக்கப்டாமலிருப்பது பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான எங்கள் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகயிருக்கவேண்டும். தனியுரிமைக்கான உரிமைகள் சிந்தனை சுதந்திரம், குற்றமற்றவர் ...
Read More »கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல்
திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இரண்டு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More »சுகாதார அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடி என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் அவர் சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More »படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி
லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்துகுள்ளானதில் கடலில் மூழ்கி 43 அகதிகள் பலியாயினர். 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ஷவையா உள்ளது. இந்த நகரில் இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் என்ஜின் பழுதாகி நின்றது. இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த ...
Read More »மட்டக்களப்பில் கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரின் மனைவி கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த கும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி ...
Read More »நிகழ்நிலை நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை வலை அல்லது மொபைல் பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்க்கின்றன. இத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டு செயற்பாட்டின் போது, மோசடி செய்பவர்கள் இரகசியமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல் / தரவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. டெபிட் / கிரெடிட் அட்டைகள் – அட்டை ...
Read More »பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு
பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் விபரங்கள் சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்) பிறப்பிடம்: குச்சம் வல்வெட்டித்துறை வாழ்விடம்: ஊறணி வல்வெட்டித்துறை, லண்டன் பிரித்தானியா ஞானக்குமரன் புத்திரசிகாமணி பிறப்பிடம்: வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா நிர்மலா சத்தியசீலன் பிறப்பிடம்: வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன் பிரித்தானியா வெங்கடாசலம் கணேசபாக்கியன் (கிளிப்பிள்ளை அப்பா) பிறப்பிடம்: குச்சம் வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன் பிரித்தானியா நாதநாயகி சண்முகசுந்தரம் (சந்திரா) பிறப்பிடம்: அமொிக்க மிஷன் ஒழுங்கை வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா ...
Read More »பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது. பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை இலங்கைஅரசாங்கத்தின் கலாச்சார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி என தெரிவித்துள்ள அவர் எவரும் உயிரிழக்கவில்லை என காண்பிப்பதற்கும் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கும் இலங்கை அரசாங்கம் முயல்கி;ன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் சொந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு பிரம்டன் மாநகர சபை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை ...
Read More »கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்களின் படி மதநம்பிக்கைகளைப் பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை 1955இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல் பின்பற்றுதல் வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது என தெரிவித்துள்ளது என ...
Read More »