கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்களின் படி மதநம்பிக்கைகளைப் பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை 1955இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல் பின்பற்றுதல் வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது என தெரிவித்துள்ளது என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் சர்வதேச சவால்களை உருவாக்கியுள்ளது ஆனால் அதற்காக எங்கள் இரக்க குணத்தையும் நம்பிக்கைகளை மதிப்பதையும் இழக்கும் நிலையேற்படக்கூடாது என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal