Tag Archives: ஆசிரியர்தெரிவு

இரணைமடு பொறியியலாளருக்கு இடமாற்றமா?

இரணைமடுக்குளத்தின் வான்கதவுகளை தானே திறந்து வைக்க ஏதுவாக அதனை திறப்பதற்கு தாமதிக்க வைத்த பொறியியலாளர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முல்லைதீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வான் பாய்ந்து பாரிய அழிவு ஏற்பட்டமைக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகளின் தவறு காரணமா எனக்கண்டறிய ஆளுநரால் நியமித்த குழுவின் விசாரணை அறிக்கை வெளிவருமுன்னரே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக வடக்கு மாகாண உள்ளக அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் நீர்த் தேக்கமான இரணைமடுக் குளமானது அதன் கொள் அளவு ...

Read More »

டிரம்புடன் 3-வது உச்சிமாநாடா? – நிபந்தனை விதிக்கிறார் கிம்

வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் கிம் ஜாங் அன் நிபந்தனை விதித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர். அதைத்தொடர்ந்து இந்த ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இரவு கேளிக்கை விடுதியில் முன் துப்பாக்கிச் சூடு!

அவுஸ்ரேலியா, மெல்பேணில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.  அதில் 37 வயதான பாதுகாப்பு காவலர் இறந்துவிட்டார்  காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ”லவ் மெசின்” இரவு கேளிக்கை விடுதியின் வெளிப்புறத்தில்    இன்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. Narre Warren South இலிருந்து ஆரோன் காலிட் ஓஸ்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,    ஆனால் பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்தார். 28 வயதான மனிதன் ஒரு மோசமான நிலையில் இருக்கிறார். ஒரு 50 வயது மனிதன் மற்றும் ...

Read More »

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வழமையான தினங்களில் நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. எனினும், இந்தப் பண்டிகைக் காலத்தில் நாளொன்றிற்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அமைவாக சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச் செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன. ...

Read More »

ஜுலியன் அசாஞ்சேவை கழட்டிவிட்டது அவுஸ்ரேலியா!

விக்கிலீக் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் கூறினார். ஏனைய அவுஸ்ரேலியக் குடிமக்களுக்கு தூதரகம் ஊடகச் செய்யும் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் அசாஞ்சேக்கு வழங்கப்படும். பிரபல்மானவர் என்பதால் எதுவித சிறப்பு நடைமுறைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம். அது பிரித்தானியாவுக்கும் அமொிக்காவுக்கும் இடையிலான விவகாரம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Read More »

வடகொரியா தலைவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது!

வடகொரியா தலைவருடனான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார். இதையடுத்து, இருநாட்டு உறவில் ...

Read More »

அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள்!

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் குறித்த மலங்காட்டு பகுதியில் வசித்தாலும் பொருளாதார ரீதியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் Flu, மிக அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தோடு அவுஸ்திரேலியாவில் வழக்கம்போல Flu பரவத்தொடங்கியுள்ளது. அதற்கமைய இவ்வருடம் குறைந்தது நாலாயிரம் பேரையாவது பலியெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் Flu தாக்கம் நினைத்துப்பார்க்கமுடியாதளவு வீச்சடைந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றது. கடந்த வருடம் மார்ச் மாதம் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 3173 என்றும், இந்தவருடம் மார்ச் மாதம் பத்தாயிரம் பேராக பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன. நாட்டு மக்கள் அனைவரையும் தவறாது Flu தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை ...

Read More »

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு – 16 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் உள்ளனர். இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள், கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ...

Read More »

பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்!

அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை செல்லுபடியற்றவையாக்குவதற்கான நடவடிக்கைகளில் தனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச எனினும் எனக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளார். பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளேன்,தற்போது அமெரிக்காவின் பதிலிற்காக காத்திருக்கின்றேன் என ...

Read More »