Tag Archives: ஆசிரியர்தெரிவு

17 லட்சம் போராட்டக்காரர்களால் ஸ்தம்பித்த ஹாங்காங்!

ஹாங்காங்கில் கொட்டும் மழையிலும் சீனாவுக்கு ஏதிராக 17 லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அந்நகரமே ஸ்தம்பித்தது ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு அடிபணிந்தது. ...

Read More »

அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற நிதி சேகரிக்கும் ஆவுஸ்திரேலியர்கள்!

மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற சிரிய அகதி  அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு ஆவுஸ்திரேலியர்கள் 1 இலட்சம் டொலர்களுக்கு மேல் நிதி சேகரித்திருக்கின்றனர்.   ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார். பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார். இந்த சூழலில், ஆவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ...

Read More »

பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம்!

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம்  பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து‌ கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், அண்மையில் பொது ஐன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர்களிற்கு ஆபத்தான பல விடயங்கள் அறிவிக்கபட்டிருப்பதுடன் தமிழர்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட கோத்தபய ராஜபக்ஷ ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருக்கிறார். இது மீண்டும் முள்ளிவாய்கால் நோக்கி ...

Read More »

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது. குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.      

Read More »

இந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. இந்தோனேசியாவின் சுலாவ்சி மாகாணத்தின் கெண்டாரி துறைமுகத்தில் இருந்து மரொவலி மாவட்டத்தில் உள்ள கலேராங் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. கொனாவே மாவட்ட பகுதியில் உள்ள போகோரி தீவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கப்பலில் தீ பிடித்தது. தகவலறிந்து மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதால் ஊழியர்களால் ...

Read More »

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின்  கடையொன்றில்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, வல்வெட்டித்துறை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்!

சிறிலங்காவிற்கு  வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்  இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் மீண்டும் சுய விருப்பின் ...

Read More »

அமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப்

கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய அதிபர் டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. 22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது. இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி!

ஹாங்காங்கில் கைதிகள் ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நேற்று பேரணி நடை பெற்றது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இதனால், கைதிகள் பரிமாற்ற ...

Read More »

13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய காவல் துறையின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய ...

Read More »