கொட்டுமுரசு

ஜெனீவா 2019 ! –

‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்திரி. ...

Read More »

வன்முறையை பரிசளிக்கும் நல்லாட்சி!

நல்லாட்சியின் இலட்சணம், இப்போதைக்கு எமக்கு விளங்கியிருக்க வேண்டும். கடந்த வாரம் புத்தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால், பொலிஸாரின் இந்த நடத்தையில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை. வன்முறையையே பதிலாகக் கொண்ட அரச இயந்திரம், தனது இயலாமையை வேறெவ்வாறு வெளிக்காட்டவியலும்? இன்று, போராடுவதைத் தவிர வழி வேறில்லை என்பதை, நல்லாட்சி தனது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் காட்டிள்ளது. அது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையாகட்டும், மாணவர்களது கோரிக்கைகளாகட்டும், புத்தளம் மக்களின் ...

Read More »

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்!

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள்.  அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியலில், பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  உள்ள கட்சிகளுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லையென்றால், என்ன செய்வது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ...

Read More »

‘தேர்தலுக்கான அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை’!-பைசர் முஸ்தபா

தேர்த​லை நடத்த ​​வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், எந்த​வோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. தேர்த​லை நடத்த, அரசியல் கட்சிக​ளே தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இல்லையென்று, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.   நேற்று (26) அவர் வழங்கிய பிரத்தியேகச் ​செவ்வியி​​லேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறைமையில் ...

Read More »

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்!

வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. அவர்களது முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் என அதனுடனேயே, பெரும் பெறுமதியான நேரத்தை நாளாந்தம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. இப்படியிருக்கையில், நாம் எவ்வாறு புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், எவ்வாறு பெட்டிக்கு ...

Read More »

அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த!

மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற வகையில், இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டாளராகக் ...

Read More »

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள்!

சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதைபடிமமான பல ...

Read More »

வாழ்வை வென்ற நிமால்!

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக் கல்வியின் ருசியைச் சுவைத்துக் ...

Read More »

ஜெனீவாவில் தமிழர்கள்!

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது விடியுமாமளவும் விளக்கனைய மாயையா ? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று ...

Read More »

புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

ஜெனி­வாவில் அமைந்­துள்ள  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட  ஐந்து நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. ஏற்­க­னவே இலங்கை  அர­சாங்கம்   தீர்­மானம் எடுத்­துள்­ளதன் பிர­காரம் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்கும் பட்­சத்தில் இலங்கை தொடர்­பான 40/1 என்ற இந்தப் புதிய பிரே­ரணை வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­படும். ஒரு­வேளை ஏதா­வது  ஒரு உறுப்­பு­நாடு  எதிர்ப்பு தெரி­வித்தால்  பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை மனித உரிமை  பேர­வைக்கு ஏற்­படும். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டா­விடின்  ஐ.நா. மனி­த ­உ­ரிமை ...

Read More »