கொட்டுமுரசு

அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா?

மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் (தமிழரசுக் கட்சித் தலைவர்) மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. படை முகாம்கள் அமைப்பதற்கு, மக்களின் காணிகளை அப(சுவீ)கரிப்புச் செய்ய முடியாது என, அங்கு, அவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ...

Read More »

பத்தாவது மே பதினெட்டை எப்படி நினைவு கூரலாம்?

பத்தாவது மே பதினெட்டு இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடும். ஜெனீவாவை எப்படி தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் மே பதினெட்டை நினைவுகூரும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நினைவு கூர்தலை யார் ஏற்பாடு செய்வது? எப்படிச் செய்வது? என்பவை தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அவ்வாறு ஒரு பொது உடன்பாடு எட்டப்படாமைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம்- நினைவுகூர்தல் என்றால் என்ன என்பது தொடர்பில் ஓர் ஒருமித்த கருத்து ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இல்லை. இரண்டாவது காரணம்- ...

Read More »

பெண்மையை போற்றும் தமிழர்!

நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம். பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு ...

Read More »

தீயில் கருகிய பிரான்ஸ் தேவாலயம் ! உலகமே அதிர்ச்சியில் ! பலர் அச்சத்தில் ! பலர் நிதியுதவி !

பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள சுமார் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் நோட்ரே டோம் தேவாலயம்,  பாரம்பரிய சின்னமாக திகழ்கின்றது. குறித்த தேவாலயத்தில்,  உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த  தீவிபத்தால் குறித்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. மெதுமெதுவாக பரவிய தீ, தேவாலயம் ...

Read More »

கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் பாதிப்பை ஏற்படுத்துமா?

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென, கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள, கனேடியத் தமிழரான ரோய் சமாதானம் தெரிவித்தார். மத்திய இலண்டன் – பிம்லிகோ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில், ரோய் சமாதானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீவினிங் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று, இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய ஊடகவியலாளர் கற்கைநெறியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் எனக்கு, ரோய் சமாதானத்தைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலண்டனுக்கு ...

Read More »

போர்க் கைதிகள் தொடர்பாக ஜெனீவா ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

இரு நாடுகளிடையே போர் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்குமே உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று பெரும் இழப்பு ஏற்படுகிறது. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற நிலையிலேயே அவர்கள் தாய் நாட்டுக்காக ஆயுதம் ஏந்துகிறார்கள். போரின் போது பல வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்திடம் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு. இதற்கு முடிவு கட்ட சர்வதேச நாடுகள் தீர்மானித்ததன் விளைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், போர்க்கைதிகளை ...

Read More »

கலப்பு நீதிமன்றம் அல்லது சிறப்புத் தீர்ப்பாயம் : கம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை கம்பூச்சியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கெமரூச் ரிபியூனல் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பு நீதிமன்றம் இரண்டு போர்க் குற்றவாளிகளுக்கு இரண்டாவது தடவை ஆயுள் தண்டனைகளை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கியூ சம்பான் 87 வயது. கெமரூச் அரசாங்கத்தின் அரசுத்தலைவராக இருந்தவர். மற்றவர் நுஓன் சே 92 வயது. கெமரூச் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதியாகவும் அவ்வியக்கத்தின் தலைவரான போல்ட்பொட்டின் வலது கையாகவும் இருந்தவர். ...

Read More »

நாவலைப் பின்தொடரும் ஒளிப்படப் பயணம்!

கேரளத்தின் வைக்கத்தைச் சேர்ந்தவர் டி.மனோஜ். ஒளிப்படக் கலைஞர். மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ‘கசாக்கின் இதிகாசம்’, பாலக்காட்டுக்கு அருகிலுள்ள தஸ்ராக் எனும் கிராமத்தில் நிகழ்கிறது. தஸ்ராக்கைத்தான், ‘கசாக்’ என்று பெயர் மாற்றிப் பிரயோகித்திருக்கிறார் விஜயன். நாவலிலுள்ள தஸ்ராக்கின் அம்சங்களை ஒளிப்படங்கள் எடுத்து அதைப் புத்தகமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் மனோஜ். இந்த மிகு நேர்த்தியான புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் படங்களெல்லாம் நாவலிலுள்ள வாக்கியங்களைப் பின்தொடர்ந்து எடுக்கப்பட்டவை. இந்தப் புது இலக்கியப் பரிமாணத்தில் இது முக்கியமானதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. அவரோடு உரையாடியதிலிருந்து… ஒளிப்படக் கலையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ...

Read More »

‘அப்பா என அழைக்க வேண்டியவன் “மாமா” என்கிறான்“!

எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து போய் நின்றேன். மனைவி விறைத்து ...

Read More »

பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்!

அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை செல்லுபடியற்றவையாக்குவதற்கான நடவடிக்கைகளில் தனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச எனினும் எனக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளார். பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளேன்,தற்போது அமெரிக்காவின் பதிலிற்காக காத்திருக்கின்றேன் என ...

Read More »