கொட்டுமுரசு

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.! அதை விடுத்து உங்கள் அரசியல் தேவைகளுக்காக இந்த விடயத்தைப் பாவிக்காதீர்கள்-என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை வரவேற்கும் அதே நேரம் ,செயல்பாட்டில் ஏதும் இல்லாதவாறு வெறுமனே தத்தமது கருத்துகளை அரச தரப்பினர் எழுந்தமானமாக கூறிவிட்டு முடிப்பதை , குறிப்பாகஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்த காலப்பகுதியில் , ஜி எஸ் ...

Read More »

ரணில் வாறார்?

அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவை.முதலாவது நகர்வு அமெரிக்கக் கொங்கிரசின் வட கரோலினாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்மொழிவு. அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை தாயகம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு. அது இனிமேற்றான் அமெரிக்க கொங்கிரசிலும் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதில் ஓர் அழுத்தப் பிரயோக நோக்கம் இருக்கிறது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவித ...

Read More »

அரிய வகை நோய்களை எதிர்கொள்வது எப்படி?

உலகில் 8 ஆயிரம் அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், அவற்றைக் கொண்டிருப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கணக்கு 450 அரிய வகை நோய்களும், 7 கோடி மக்களும். குறிப்பிட்ட மக்கள்தொகையில் குறைந்த அளவில் ஏற்படும் நோய்களை ‘அரிய வகை நோய்கள்’ (Rare Diseases) என்று வரையறுத்திருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி அரிய வகை நோய் என்பது 10 ஆயிரம் பேரில் 10 பேருக்கும் குறைவாக இருப்பது. அரிய வகை நோய்களில் 5% நோய்களுக்குத்தான் சிகிச்சை இருக்கிறது. இருக்கும் ...

Read More »

இன்று உலக யோகா தினம்: ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் யோகா

உலகில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அத்தகைய ஆரோக்கியமான வாழ்வை அளிக்கவல்ல சக்தி யோகா கலைக்கு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோகா கலை தோன்றியது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவம் கொடுத்து, யோக சூத்திரங்களை அமைத்து, அதற்கு உயிரூட்டி, அதை நிலை பெறச் செய்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். அதனால்தான் அவரை யோகா கலையின் தந்தை எனவும், அவர் கொடுத்த யோகா ...

Read More »

பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்

மே 10-ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக பலஸ்தீனத்தின் காஸா மீது தனது இராணுவ இயந்திரத்தினை ஏவி தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது இஸ்ரேல். பெருமெடுப்பில் வான், தரை வழித்தாக்குதல்களில், மொத்தம் 240 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 வரையானவர்கள் சிறுவர்கள். காஸாவில் அமைந்திருந்த ஊடகக் கட்டிடத்தை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல் நடாத்தி அதனை இஸ்ரேல் படைகள் தரைமட்டமாக்கியுள்ளன. அல்-ஜசீரா, AP உட்பட்ட உலக ஊடகங்களின் அலுவலகங்கள் அக்கட்டிடத்தில்தான் அமைந்திருந்தது. கட்டிட உரிமையாளருக்கு முற்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, ஒரு மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு, 12 மாடிகளைக் கொண்ட அந்த ...

Read More »

நிலையின்மையின் தத்துவார்த்தத் தேடல்

பெர்சேபோலிஸ் மர்ஜான் சத்ரபி வின்டேஜ் புக்ஸ் விலை: ரூ.599 மர்ஜான் சத்ரபியின் புகழ்பெற்ற கிராபிக் நாவலான ‘பெர்சேபோலிஸ்’ வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாவல் மையப்படுத்தியிருக்கும் காலகட்டமோ இன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் முந்தையது. நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அந்நாவலில் பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் இன்றும் தன்மை மாறாமல் நிகழ்ந்துவருகின்றன. கருத்தியல் அதிகாரத்தின் விளைவுகள் எல்லாக் காலகட்டத்திலும் ஒரே தன்மையுடையதாகத்தான் இருக்கின்றன என்பதை அந்நாவல் உணர்த்துகிறது. ஈரானில், 1979-ல் இஸ்லாமியப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை ஆடைக் கட்டுப்பாட்டு, மதரீதியான அடக்குமுறைகள் ஆகியவை நடைமுறையில் இருக்கவில்லை. ...

Read More »

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், சந்திப்பு பிற்போடப்பட்டமை குறித்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கத்திலிருந்தே ...

Read More »

ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா?

வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் ...

Read More »

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு பிளாஸ்ரிக் துகள்களை கோணிப் பைகளில அள்ளிப் போடுகின்றார்கள். சிசிபஸ் மீண்டும் மீண்டும் மலையை மேலே தள்ளிச் ...

Read More »

கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்

கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசாரோடு சில ...

Read More »