கொட்டுமுரசு

சிறுவர்களின் உரிமையை மறுக்கும் நாடுகளை உலகம் மயிலிறகால் தடவுகிறது!

ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மிரட்டுகின்றன. அவர்களைத்தான் சூனியமான எதிர்காலம் அச்சுறுத்துகிறது. எங்கள் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது. எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள ...

Read More »

வடமாகாண சபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா?

நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக வைக்குமாறு கோரி ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பலாம் என தர்மபால செனவிரட்ன அவைத் தலைவரிடம் கேட்டிருந்தார். நாங்கள் அவ்வாறு ...

Read More »

தமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா?

தலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன் முன்னெடுக்கின்றான். காலத்தை முன்னெடுப்பவனை வரலாறு முன்னுயர்த்தி அவனை அம்மக்களின் குறியீடாக்குகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிடவும் மிகப் பெரிய அரசியல் பேரவலத்திற்கு தமிழ் மக்கள் ஆளாகியுள்ள காலமிது. தோலிருக்க சுளை பிடுங்கும் நுட்பமான அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்படும் காலமிது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இப்படியொரு பாரிய அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாகியதில்லை. இது ஒரு நூற்றாண்டு காலம் கண்டிராத மொத்த அவலம். முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலந்தான். அது ஓர் இனப்படுகொலை வாயிலாக இராணுவம் தமிழரை நசுக்கிய ...

Read More »

யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு!

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு – வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். இம்முறை திரைப்பட விழாவில், மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 5, ...

Read More »

எமது சமூகம் இனிமேல் தன்னும் விழித்துக் கொள்ளுமா?

உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களும் உங்கள் இழப்பினால் கவலை மட்டும் அன்றி ஆத்திரமும் கொண்டுள்ளார்கள்.நான் எழுதும் இக்கடிதமும் ஆத்திரம் கலந்த ஆதங்கத்தின் ஒரு வெளிப்பாடே! உங்களை அறிந்தவர்கள், குறிப்பாக உங்களது தாயார், நீங்கள் தற்கொலை செய்யும் ஒரு பெண்ணல்ல எனத் தெளிவாகக் கூறுகிறார்கள். அதுவே போதும் இது தற்கொலையா அல்லது கொலையா ...

Read More »

மாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் உச்சமாக இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு உலங்கு வானூர்திகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மாலைதீவு நிர்வாகம் பணித்திருந்தது. மாலைதீவில் தங்கியிருந்த இந்தியாவின் 26 விமானப்படை அதிகாரிகளுக்கான கடவுச் சீட்டை இரத்துச் செய்தது. அத்துடன் மாலைதீவில் பணியாற்றிக் கொண்டிருந்த 2000 இந்திய பணியாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தது. வழமையாக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்படும் மாலைதீவின் விளம்பர நிறுவனங்களுக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்க ...

Read More »

திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்

கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ...

Read More »

வடக்குக்கு வந்துள்ள ஆபத்து!

காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன. இந்த அறிக்கையில், 2050ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொள்ளப் போகின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இலங்கைத் தீவிலும், ...

Read More »

திலீபன் மீது சத்தியம் செய்வோம்!

அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம். அதுவும், அஹிம்ஷையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபுக்கு மாத்திரமல்ல, அஹிம்ஷைப் போராட்ட மரபுக்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று, உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன். அப்படிப்பட்ட திலீபனின் நினைவு நாள்களில், தமிழ்த் தேசியச் ...

Read More »

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்!

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ரணி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் யார் என்ற விவ­காரம் இப்­போது முன்­னை­யதை விடவும் சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர்­களில் ஒரு­வரை போட்­டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது. குறிப்­பாக, ...

Read More »