கொட்டுமுரசு

இந்தியாவின் வெளியுறவு கொள்கையும் ஈழப் போரின் ஆரம்பமும் முடிவும்?

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசின் தலையீடு என்பது எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் போராட்டத்தை ஆதரிப்பது போன்று அரவணைத்த இந்தியா. போராட்ட கள இளைஞர் அணிகளை மோதவிட்ட சாணக்கியம் ஈழ விடுதலை போராட்டத்தின் கறை படிந்த அத்தியாயங்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் ஈழத்தீவில் “அமைதிப் படை” என்ற போர்வையில் இந்திய ஆக்கிரமிப்புப் படை கால் பதித்து ஈழத்தமிழர்களையும் போராளிகளையும் கொன்றெழித்து தனது கோர முகத்தை உலகிற்கு காட்டியது. தமிழீழ அரசு ஒன்று அமைவதை இந்தியா எப்போதும் ...

Read More »

அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன!

ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் ...

Read More »

விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா?

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட ...

Read More »

பத்திரிகையாளன் வாயை மூடவே முடியாது! – ‘நக்கீரன்’ கோபால்

ஒரு கட்டுரைக்காகத் திடீர் கைது, முன்னுதாரணம் அற்ற நிகழ்வாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பிரயோகம், ஊடகங்களின் ஒட்டுமொத்த எதிர்க்குரல், நீதிமன்றத்தின் குறுக்கீடு, விடுவிப்பு என்று மீண்டும் பரபரப்பு எல்லைக்குள் வந்திருக்கிறார் ‘நக்கீரன்’ கோபால். ஆளுநர் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரைக்காகக் கைதுசெய்யப்பட்ட விதம் அவரைப் புண்படுத்தியிருந்தாலும், அவரது துணிச்சலை அது துளியும் பாதிக்கவில்லை. ஊடகங்கள் இன்று எதிர்கொள்ளும் மோசமான சூழலை விரிவாகப் பேசினார். ஒருவேளை நீதிமன்றம் தங்களை விடுவிக்காமல் இருந்திருந்தால், ‘நக்கீரன்’ முடங்கியிருக்குமா? ஏனெனில், ‘நக்கீரன்’ ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மீது எஃப்ஐஆர் ...

Read More »

ஒரு நாள், ஒரு காடு, சில பறவைகள்! சுப்பிரமணியத்துடன் ஒரு பயணம்

D-750 நிக்கான் கேமரா, 500 ஜூம் லென்ஸ், கூடவே கேமரா ஸ்டேண்ட். தூக்க முடியாத பையை தூக்கிக் கொண்டு அதிகாலையிலேயே தன்னந்தனியாகவே கிளம்பி விடுகிறார். ‘உடன் வருகிறேன்!’ என்றபோது அவ்வளவு சுலபமாய் அவர் சம்மதிக்கவில்லை. சில குறிப்பிட்ட நாட்களில் ‘கூப்பிடுகிறேன்!’ என சொல்லி போக்குக் காட்டிவிட்டு தொடர்ந்து கல்தா கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு முறை மிகவும் வற்புறுத்திய பிறகு, ‘இல்லண்ணா, நான் எங்கே போனாலும் தனியா போறதுதான் வழக்கம். பறவை மட்டுமில்லண்ணா, சிறுத்தை, புலி, மர அணில், செந்நாய்னு ஏகப்பட்டது சுத்தற இடம். நம்மால ...

Read More »

விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு!

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கான அங்கிகாரம் மெல்ல மெல்லக் கீழிறங்கத் தொடங்கிவிடும். அதையே, தமிழ்த் ...

Read More »

பாதியில் முறிந்த பயணம்!

எஸ்.சம்பத் சிந்தனை உலகுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இருக்க வேண்டிய அவசியமான உறவின் இசைமையைப் புனைவின்வழி அற்புதமாகப் பிணைத்தவர் சம்பத். அடிப்படை விஷயங்களில் உழலும் புனைவு மனம் இவருடையது. ஆண்-பெண் உறவும் சாவும் இவரைப் பெரிதும் வாட்டிய விஷயங்கள். அவருடைய சிறுகதைகளும் குறுநாவல்களும் ஒரே நாவலான ‘இடைவெளி’யும் இத்தன்மைகளில் உருவாகியிருக்கும் படைப்புகளே. தன் அனுபவங்களின் ஊடாக அறியவரும் வாழ்வின் விசித்திர குணங்களும், அனுபவங்களின் சாரத்தில் உருக்கொள்ளும் கருத்துகளும் கேள்விகளும் அலைக்கழிப்புகளும் சம்பத்தின் புனைவுப் பாதையை வடிவமைக்கின்றன. அந்தப் பாதையில் உள்ளுணர்வின் ஒளியோடு பிரச்சினைகளுக்கான விடைகளைத் தர்க்கரீதியாகக் ...

Read More »

ஈழப்போரில் இறந்த அம்மாவிடம் பால் குடித்த ராகிணி… இப்போது எப்படி இருக்கிறாள்?

இலங்கையில் 2008-09-ம் ஆண்டுகளில் நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் ஏராளம். உடல் உறுப்புகளை, உறவுகளை, உடைமைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். போர் நடந்து 10 ஆண்டுகள் ஆனபோதும், அந்தத் துயரத்தின் வலியைச் சுமந்துவாழ்பவர்களின் நிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போர் நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்து வந்த காட்சிகள் நம் மனத்தை உலுக்கி தீபச்செல்வன்எடுத்தன; வற்றாத கண்ணீரை வரச்செய்தன; மாபெரும் குற்றஉணர்ச்சிக்குள் தள்ளின. அதிலும், தாய் மாண்டது தெரியாமல், அவள் மார்பில் பால் குடிக்கும் 8 மாதக் குழந்தையின் புகைப்படம், இதுபோன்ற நிலை உலகின் எந்தக் குழந்தைக்கும் ...

Read More »

சிவபூமி சிங்கள பூமியாகுமா?

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ...

Read More »

அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழமுதம் என்ற பெயரில் ஒரு தமிழ் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. அவ்விழாவிற்கு நிதி அனுசரணை செய்தவர்களுள் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளரும் ஒருவர். ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கிய இவர் கூட்டமைப்பின் கனடா அணியைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் ...

Read More »