1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண ...
Read More »கொட்டுமுரசு
கேரளத்தின் தைரியலட்சுமி!
கடலில் ஆர்ப்பரித்து எழுகின்றன அலைகள். பள்ளியில் படித்த அகடுகளும் முகடுகளும் போல நிலைகொள்ளாது ஏற்ற இறக்கமாக அலைபாய்கிறது கடல் மட்டம். வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க சுடிதார் துப்பட்டாவால் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு, கணவர் கார்த்திகேயனோடு கடலுக்குள் படகைத் தள்ளிச்சென்று துள்ளி ஏறுகிறார் ரேகா! இந்தியாவிலேயே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உரிமம் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கும் ரேகா சொந்தக்காரர். கேரள மாநிலம், திருச்சூரை அடுத்த சேட்வா பகுதிதான் இவரது பூர்வீகம். ஒரு பக்கம் தன்னுடைய நான்கு மகள்களைப் பொறுப்புடன் வளர்க்கிறார்; மறுபுறம் கடலோடிப் பெண்ணாகவும் ...
Read More »தேர்தல் மேடைக்குத் தயாராகும் கூட்டமைப்பின் நவீன ‘டீல்’ நாடகம்
உயிரைக் காப்பாற்றவே விடுதலைப் புலிகளுடன் அன்று டீல் செய்ய நேர்ந்தது என்று சுமந்திரனும் அவரது கையாள் சயந்தனும் சொல்வது உண்மையானால், முள்ளிவாய்க்காலின் பின்னர் அந்த டீலைக் கைவிட்டு, கூட்டமைப்பைக் கலைத்து, தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனித்து தேர்தலில் போட்டியிட இவர்கள் தயங்குவது ஏன்? அண்மையில் எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார். பொலிரிக்ஸ் (Politics) என்பது லத்தீன் வார்த்தை என்றும், அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார். பொலி என்றால் பல என்று அர்த்தம். ரிக்ஸ் என்றால் இரத்தத்தை உறிஞ்சும் உயிரினம் ...
Read More »மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் வீரவணக்க நாள்!
சந்திரிக்கா அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தியவரும், மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சந்திரிக்கா அரசின் கொலையாளிகளால் 05.01.2000 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களத் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து. ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர் குமார் பொன்னம்பலம் அவர்கள். இவரின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது. சந்திரிக்கா அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை ...
Read More »“புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு எங்களிடம் செல்வாக்கு செலுத்தாது”!
கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று, புதன்கிழமை மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு ...
Read More »இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைனின் நாக்கு!
நான் ஒரு பெரிய ஜீனியஸ். அற்ப மானிடப் பதர்கள் எல்லாம் பத்து கிலோ மீட்டர் தள்ளி வாருங்கள் என்று ஐன்ஸ்டைன் ஒருபோதும் ஒருவரிடமும் சொன்னதில்லை. ஐந்தாவது வகுப்பு மாணவர்கூட, ’ஐயா ஒரு ஐயம்’ என்று அவரை அணுகிவிட முடியும். குனிந்து தோளைப் பிடித்து என்ன என்று பரிவோடு கேட்பார். ஐன்ஸ்டைன் குளிக்கப் போகும்போதுகூட இடைமறித்து, ‘குவாண்டம் எந்திரவியல் என்றால் என்ன, ரொம்ப அவசரம்’ என்று நீங்கள் கேட்கலாம். அவரும் துண்டை மேஜையின்மீது வைத்துவிட்டு, இப்படி வா சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துப் ...
Read More »“புற்று நோய் எனக்குக் கிடைத்த பரிசு” – மனிஷா கொய்ராலா உருக்கம்
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா. மனிஷா கொய்ராலா, 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகைக் கலக்கியவர். வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி’ இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் ...
Read More »சாதனை முகங்கள் 2018
சுயத்திலும் சுற்றத்திலும் மாற்றம் ஏற்படுத்த பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து தடம்பதித்த பெண்கள் பலர். அந்தவகையில் இந்த ஆண்டு சாதனைபடைத்த பெண்களைப் பற்றிய தொகுப்பு இது. விருதால் கிடைத்த அங்கீகாரம் மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுப் பட்டியலில் 14 பெண்கள் இடம்பெற்றிருந்தார்கள். பத்ம விருதுகளில் பெண்களுக்கான தனிப் பிரிவுகள் இல்லை என்றபோதும் தங்களுடைய திறமையால் இவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களில் பிஹார் நாட்டுப்புறக் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியை நானம்மாள், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி ...
Read More »தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்
வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வெச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாகும் நடவடிக்கை அது என்றும் ...
Read More »திடீர் வெள்ளத்தால் திணறிய கிளிநொச்சி முல்லைத்தீவு!
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எவரிடமும் இருந்திருக்கவில்லை. 21 ஆம் திகதி இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. பாரியளவிலான நீர்ப்பாசன குளங்கள் முதல் சிறிய நீர்ப்பாசன குளங்கள் வரை வழமைக்கு மாறாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal