கொட்டுமுரசு

பழசைக் கிளறிக் கிளறி புதிதாக்குதல்!

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில், புலம்பெயர்ந்து கனடா நோக்கிச் செல்லும் தமிழ் மக்களது எண்ணிக்கை, சடுதியாக அதிகரித்தது. இவ்வாறு, வேறு பல நாடுகளிலிருந்தும் கனடா நோக்கி, இடம்பெயர்ந்து மக்கள் சென்றார்கள். இவ்வாறு செல்லும் குடியேற்றவாசிகளை, அங்கு சிறையில் அடைத்து வைப்பார்கள். பிறநாட்டு அகதிகள் தங்கியிருந்த அறை, அவர்கள் வெளியே செல்லாதவாறு, பூட்டுகள் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும்.  ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குக் கதவே கிடையாது. இந்நிலையில், ஒரு நாள் சிறைச்சாலையைப் பார்வையிட, அந்நாட்டு அரச உயர் அதிகாரி ...

Read More »

கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ?

முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காண்பித்தார்கள். ...

Read More »

திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை!

அண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது. அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிராகவே இருப்போம். நீங்கள் கூறுவது ...

Read More »

ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்!

கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி விட்டது. ஐந்தாண்டுகளிற்கு முன்னர் இலங்கை இணை அனுசரணை வழங்கும் போது உயர்ந்த எங்கள் நெற்றிப் புருவங்கள், இன்று அதே ஜெனிவா முன்றலில் வைத்து ஐநா தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சண்டித்தனமாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததோடு ஓய்வு நிலைக்கு வந்து விட்டன. தமிழர்களிற்கு தாங்கள் பெரிய கெட்டிக்காரன்கள் என்று இருக்கும் மிதப்பு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழர்களின் இந்த ...

Read More »

அச்சுறுத்தலாக மாறுகின்றதா முஸ்லிம்களின் பாதுகாப்பு ஆடை?

உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள  இனவாத சக்திகளும்  அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் அன்றாடம் காண்கின்றோம். இந்தியா, இலங்கை தொட்டு மேற்குலக நாடுகள் வரை, பல தேசங்களின் அரசியல், இனவாதத்தின் முக்கிய மூலதனமாக, முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் இனவாத சம்பவங்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும் இந்த நாட்டில் இனவாதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது; ...

Read More »

ஆப்பு வைக்கும் தேர்தல் வியூகம்!

உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு ...

Read More »

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்ந்து இயங்கும்!

காணாமல்போனோர் அலுவலகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஜெனிவா பேரவையில், இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பேரவையில் தினேஷ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “30/1 மற்றும் 40/1 போன்ற பிரேரணைகளுக்கான அனுசரணையிலிருந்து அரசாங்கம் விலகினாலும்   ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். அபிவிருத்தி நிரந்தர சமாதானம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் நாங்கள் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக ...

Read More »

விக்கிப்பீடியாவில் தமிழ் முன்னணியில் இருப்பது எப்படி?

துறை சார்ந்த நிபுணர்கள் முதல் மாணவர்கள், பொதுமக்கள் வரை தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தேடிப் பெற கூகுள் போன்ற தேடு பொறிகள் பெரும் உதவியாக உள்ளன. எனினும், பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் தகவல்களைத் தேடுவோர் எண்ணிக்கை ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் 68% உள்ளது. இந்நிலையில், பல்வேறு துறை சார்ந்த தகவல்கள் இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் கிடைக்கச் செய்வதற்கான ஏராளமான தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவ்வகையில், தமிழ் மொழி தகவல்களை இணையத்தில் இடம்பெறச் செய்வதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா 2003 ...

Read More »

எது சரியான மாற்று அணி? ?

விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் ...

Read More »

தெற்காசிய பிராந்திய ஒருமைப்பாடு எதில் தங்கியிருக்கிறது?

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) மிகவும் உயர்ந்த மட்டங்களில் முழுமையாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாக மாறுவதிலேயே பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பிராந்திய ஒருமைப்பாடு வெற்றிகரமானதாக அமைய முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னிந்திய நகரமான பெங்களுருவில் ஞாயிறன்று தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததையடுத்து 2017 காத்மண்டு சார்க் உச்சிமாநாடு ஒத்தி வைக்கப்பட்டமை இந்தப் பிராந்திய அiமைப்பை ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று கூறிய விக்கிரமசிங்க பிராந்திய நாடுகள் கேந்திர முக்கியத்துவ ரீதியிலும் ...

Read More »