கொட்டுமுரசு

இலங்கையில் சீனாவின் யுத்தக்கலை

ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கை சீனாவிடமிருந்து மற்றுமொரு தொகுதி முகக்கவசங்களையும் மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது-இது சீனாவின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய இலக்காக இலங்கை காணப்படுவதையும்,நன்கொடை இராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது சீனா தொடர்ந்தும், இந்தோ பசுவிக்கில் தன்னை விஸ்தரிப்பதும்,அதன் புதிய பட்டுப்பாதை திட்டம் ஆரோக்கியமான பட்டுப்பாதைதிட்டமாக முடிவடைந்திருப்பதும்,அமெரிக்க-சீன பதட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்து சமுத்திரத்தில் முக்கிய கப்பல் பாதைகளின் அருகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமெரிக்க இராஜதந்திரி அலைஸ்வெல்ஸ் இலங்கையை முக்கியமான ரியல்எஸ்டேட் என குறிப்பிட்டார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சீனாவின் தீவிர நடவடிக்கைகள் உலக ஒழுங்கினை ...

Read More »

‘மலையக மக்கள் முன்னணியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’

தனது தந்தையின் எண்ணக்கருவில் உதித்த மலையக மக்கள் முன்னணியானது, எனது கருவிலேயே விதைக்கப்பட்ட கட்சி. ஆகவே, ஒருபோதும் இதை நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். வெற்றிபெற்ற அடுத்த நிமிடம் மலையக மக்கள் முன்னணி எனது கைகளுக்கு வரும். மலையக மக்கள் முன்னணியை மீண்டும் சரியான முறையில் எனது தந்தையின் கொள்கைக்கு ஏற்றவாறு மீளக் கட்டியெழுப்புவேன்” என, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அமரர் பெரியசாமி சந்திரசேகரின் புதல்வியும் நுவரெலியா மாவட்டத்தில் இலக்கம் 4 கோடரிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.  விசேட ...

Read More »

ரவிராஜின் 58 ஆவது ஜனனதினத்தில் ரவிராஜ் பற்றிய கண்ணோட்டம்

பரந்துபட்ட இவ்வுலகில் மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது நியதியாகும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தாம் இறந்த பின்பும் மக்களின் மனதில் நிலைத்து இவ்வுலகில் என்றும் வாழ்வார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மரணம் என்றும் வென்றுவிட முடியாது. அந்த வரிசையில் மிக முக்கியமானவர் தமிழ் மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலித்து இறுதியில் தமிழ் மக்களின் நீதிக்காக தன் உயிரையும் தியாகம் செய்த “மாமனிதர் நடராஜா ரவிராஜ்” அவர்கள் அந்த வகையில் மாமனிதரின் சில குறிப்புகளையும் அவர் இறந்த ...

Read More »

செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’

சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள், முதலில் ...

Read More »

எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை. எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பிழை விடும்போது அவற்றை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதும் முக்கியமானது எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன். யாழ். ஊடக அமையம் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவரது ஊடகவியலாளர் மாநாட்டுத் தகவல் வருமாறு; கேள்வி ; தேர்தல் நடவடிக்கைக்கு மக்களிடம் நிதி உதவி கோரியதை ஏனைய தமிழ் கட்சிகள் ...

Read More »

இந்தியா – சீனா மோதலுக்குப் பின்னுள்ள வரலாறு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்கள், பாங்காங் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள் யாவற்றையும் ‘திபெத்தின் ஐந்து விரல்கள்’ என்ற உருவகத்தோடு சீனா பிணைக்கிறது. அது என்ன திபெத்தின் ஐந்து விரல்கள்? மாவோவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கருத்தாக்கத்தின்படி, திபெத் பகுதிதான் சீனாவின் வலது உள்ளங்கை; லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாசல பிரதேசம் ஆகியவை அதன் ஐந்து விரல்கள். அவற்றை விடுவிப்பது தனது கடமை என்று சீனா கருதுகிறது. இந்த ஐந்து விரல்களும் தன்னுடனேயே இருக்கும்படி உறுதிசெய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா ...

Read More »

சிவகுமார் செய்யும் ‘செலக்டிவ்’ யோகாக்கள்!

‘தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன்’என மாறா இளமையுடன் திகழ்வதாகப் புகழப்படுபவர் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். இந்த 78 வயதில் அவரது ‘இளமையின் ரகசியம்’எதுவெனக் கேட்டதும் இத்தனை காலமாக செய்து வந்த ‘யோகா’என்கிறார். யோகக்கலையில் தனது 16-வது வயதில் தினசரி 38 ஆசனங்களைச் செய்யத் தொடங்கியவர் தற்போது ஒருசில ஆசனங்களை மட்டும் ‘செலக்டிவாக’ செய்வதாகவும் மூச்சுப் பயிற்சிக்கு முதலிடம் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரிடம் உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறமுடியுமா என்றதும் ரத்தினச் சுருக்கமாக பதில் வந்தது. மூச்சுக்கு முதன்மை “உடற்பயிற்சிக்கும் யோகப் பயிற்சிக்கும் உள்ள ...

Read More »

சீண்டிப் பார்க்கும் சீனா: சீற மறுக்கிறதா இந்தியா?

“இமயமலையில், இன்னமும் எல்லை வரையறுக்கப்படாத பகுதி ஒன்றில் இந்திய – சீனத் துருப்புகளுக்கு நடுவே நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் கடும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று தொடங்குகிறது ‘சீனா டெய்லி’ எனும் சீன நாளிதழின் தலையங்கம். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) இந்தியத் துருப்புகள் இரு முறை தாண்டி வந்ததால் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்றும், ‘ஆத்திரமூட்டும்’ அவர்களது செயல், இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்தது என்றும் அந்தத் தலையங்கம் குற்றம் ...

Read More »

உலகை அதிரவைத்திருக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள்!

நிறவெறிக்கு எதிராக உலகெல்லாம் ஊர்வலங்கள் தற்போது நடப்பதற்கு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இது போன்ற பல படுகொலைகள் இதுவரை பல நாடுகளில் நடந்தேறி இருக்கின்றன. கனடாவிலும் ஊர்வலங்கள் நடந்தேறின. தனிப்பட்ட சாதாரண ஒருவரின் மரணம், அதை வீடியோ படமாக்கியது, அதை ஊடகங்கள் வெளியே கொண்டுவந்த முறை, பொறுமையை இழந்த கறுப்பின மக்கள் ஒன்றுபட்டுச் செயலாற்றியது என்று எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை இந்த மரணம் அதிரவைத்திருக்கின்றது. இது போன்ற வேறு நாடுகளில் நடந்த பல மரணங்களை மூடி மறைக்கவும் ...

Read More »

காக்கா எச்சமா, காக்கைக் கூடா?

பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் விகாரை அமைக்கப்பட்டு, அதற்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவை, கடந்த வாரப் பத்திரிகைச் செய்திகள் ஆகும். தமிழர் ஒருவர், கொழும்பில் மத்திய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதிலும், வெளி மாவட்ட மீனவர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிக் கடற்றொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை. அடுத்து, அந்நியர் ...

Read More »