கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென்றவர்களின் தவறா, முண்டியடித்து நிவாரணத்துக்குச் செல்வதற்கான நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தின் தவறா? இலங்கை ...
Read More »கொட்டுமுரசு
கொரோனாவை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு!
கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு என சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த ...
Read More »ஈழ விடுதலைப் போரின்போது குதிரை மீது உட்கார்ந்திருக்கும் மரணத்தை வரைந்தேன்!- ஓவியர் மருது
வீடு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. தேசத்தின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் அளிக்கத் தவறிவிட்டோம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வீடு திரும்புவதற்காகப் படும் அல்லல்களைப் பார்த்துப் பார்த்து எதிர்வினையாக ஓவியர் மருது தனது ஸ்கெட்ச் புத்தகத்தில் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார். ‘எனது கையறு நிலையில் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ என்று ...
Read More »கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’
கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ”ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது. ”இயற்கை அன்னை வழங்குகின்ற ஒரு சொட்டு நீர் கூட, வீணே கடலுடன் கல(ந்து)க்க விடக்கூடாது; அந்த நீரைச் சேமிக்க வேண்டும்; அதற்காக நீர்நிலைகள் ...
Read More »ஒரு நிகழ்வு-இரு அளவுகோல்கள்
இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்தர்கள் அங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடம் அரக்கத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்` ;—முள்ளிவாய்க்கால் நினைவு உரை 2020 இல்—ஹோஸே மனுவேல் ராமோஸ் ஹோர்டா—1996 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றவர். கால்பந்து உட்பட கோல்கள் அடித்து விளையாடும் ஆட்டங்கள் தொடர்பில் ஒரு சொலவடை உண்டு ;நமக்கு ஒத்துவரவில்லை என்றால் கோல் போஸ்ட்டுகளை தள்ளிவை என்பதாகும். அதாவது தமது தேவைக்கேற்ற வகையில் அளவுகோலை மாற்றிக் கொள்வது. அடுத்தவர்கள் எதையாவது முறையாகச் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்கள் ...
Read More »தலைவர் பிரபாகரனும் பூரியும்!
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார்.இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் ...
Read More »முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு நீதி வேண்டும் !
விடுதலைப்புலிகளை பேரினவாத அரசுகள் பயங்கரவாதிகளாகவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவுமே கருதுகின்றன. அந்த அடிப்படையில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு உள்ளுர் மற்றும் சர்வதேச இராணுவ ஒருங்கிணைவு ஒன்றின் மூலம் ஆயுத ரீதியாக அடக்கப்பட்டார்கள். தோல்வியடையச் செய்யப்பட்டார்கள். பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டிருந்தாலும்கூட, இலங்கையை இரண்டாகப் பிரிப்பதற்காகவே அரச படைகளுடன் ஓர் ஆயுத மோதலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேசமும் அதனை ஒப்புக்கொண்டிருந்தது. இதனால்தான் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற அதேவேளை, பிரிவினைவாதிகள் என்றும் ...
Read More »பெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்…!
அது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ...
Read More »மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது?
கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் ...
Read More »அஞ்சலி செலுத்த முடியாத அவலநிலை
அச்சுறுத்தல்கள் அடக்குமுறைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள ராஜபக்ஸக்கள் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் மீது கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான அணுகுமுறையின் அப்பட்டமான வெளிப்பாடாக இந்த நெருக்குதல்கள் அமைந்திருக்கின்றன. அதனைத் தெளிவாகக் காண முடிகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அந்த மண்ணில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகி அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்ற ஒரு நிகழ்வு. வருடந்தோறும் நடைபெறுவது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறுவது. ...
Read More »