சிறப்பு செய்திகள்

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி!

அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து மிகப் பாரிய ஆயுத ஏற்றுமதியாளராக முடியும் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூலோபாய இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது தர்க்க ரீதியானது. ஆயுதங்கள் தேவைப்படும் நாடுகள் அவற்றைப் பிற நாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதை விட தாமே அவற்றை உற்பத்தி செய்வதானது செலவு குறைந்தது. அத்துடன் தேவைக்கு மேலதிகமான ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பது இலாபத்தை ...

Read More »

தலைவர் பிரபாகரனின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனத்தின் 30-ஆவது ஆண்டு!

இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டும் என மிரட்டல் ...

Read More »

ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள்: 4-8-2006

பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர். பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் இலங்கை மண், வைகறை ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற காணொளி  திரைப்படத்தையும் ...

Read More »

துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையும் கக்கும் ! -கப்டன் வானதி

ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் சொல்லாது எமக்கென புதுவழி வகுத்துக் கொண்டு சிறப்பாகச் சொன்னால் அது புதுமை. இப்படி தனக்கொரு வழிகண்டு அதை கவியாய் தந்தவள்தான் கப்டன் வானதி. கப்டன் வானதி யாழ் தொழிநுட்பக் கல்லூரியிலிருந்து தன்னை தமிழீழ விடுதலைக்காக இணைத்துக் கொண்டவர். நெருக்கடிகளில் உறுதியுடன் மனோபலமும் கொண்டு போராடிய கப்டன் வானதியின் கவிதைகள் காலத்தால் அழியாதவை. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆனையிறவுப் பெருந்தளம் மீது 1991 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமரில் வீர காவியமான கப்டன் வானதி ...

Read More »

செல்போனில் இருக்கும் அதிக ஆபத்துகள்!

மனிதனின் 6-வது விரலாக கருதப்படும் செல்போனில் கிடைக்கும் நன்மைகளை விட, இதனால் ஏற்படும் ஆபத்துகளே அதிகம். அதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்…! இன்றைய உலகம் செல்போன் யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. மனிதனின் 6-வது விரல் செல்போன் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த செல்போன். இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. வணிகர்கள், பயணிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் அவசரத் தொடர்பு ஆதரவாளனாக செல்போன் விளங்குகிறது. செல்போனில் ...

Read More »

உலக அகதி நாள்: ஜூன் 20- 2000

உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20-ல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். ...

Read More »

‘சே’ என்னும் மந்திரச் சொல்! -ஜூன் 14 பிறந்த தினம்!

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. . அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ...

Read More »

ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்ட நாள் இது. அதை உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. கைதட்டி வரவேற்றது. முள்ளிவாய்க்காலில் ...

Read More »

அன்னையர் தினம்- அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது!

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள். அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை ...

Read More »

வட கொரியா-அமெரிக்கா போர்: அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் Leonid Petrov ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். Leonid Petrov வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போரில் வடகொரியா மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும். வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் குடும்பத்துடன், சீனா, ரஷ்யா அல்லது தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் போருக்கு பிறகு நாட்டைச் மறுசீரமைக்க சுமார் 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். வடகொரியாவும், ...

Read More »