செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாத 26 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் வைத்திருந்தவர்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் பலர் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்துள்ளனர். அங்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கள்ள துப்பாக்கிகள் இருப்பதாக காவல் துறை கணித்துள்ளனர். இதனால் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமான துப்பாக்கிகளை ஒப்படைப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லாவிடில் ரூ.1 கோடியே 30 லட்சம் அபராதம் மற்றும் 14 ஆண்டு ஜெயில் தண்டனை ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!

இந்தியா- அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னையில் நடைபெறுகிறது. வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியா- அவுஸ்ரேலியா ...

Read More »

ஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. கன்பராவில், நேற்று நடந்த நிகழ்வில், அவுஸ்ரேலியாவின் சார்பில் குடிவரவு மற்றும் எல்லா பாதுகாப்பு திணைக்களத்தின் செயலர் மைக்கேல் பெசுலோவும், சிறிலங்காவின் தரப்பில் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஆட்கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்கும், ஆட்கடத்தல் முறைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இடைமறித்தல் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை விசாரணை செய்வதற்கும், இந்த உடன்பாடு வழிசெய்கிறது. ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!

கார் மோதி 24 வார சிசு இறந்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செவிலியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அவுஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த டிம்பில் கிரேஷ் தாமஸ் (வயது 32) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் அஷ்லேயா ஆலன் என்ற கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 24 வார கரு கலைந்தது. கிரேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிம்மிற்கு சென்று விட்டு வீட்டிற்கு ...

Read More »

அவுஸ். 377/9; 72 ரன்கள் முன்னிலை

வார்னர் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது. வங்காள தேசம் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 305 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 விக்கெட்டுக்கள் அள்ளினார். பின்னர் அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ...

Read More »

20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவு!

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பதாக இணங்கியதை அடுத்து, நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சட்டமா அதிபர் ...

Read More »

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் பிள்ளையார்!

ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுள்கள் மற்றும் இறை தூதர்கள், விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக அமைந்துள்ளது. இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. இருப்பினும் அனைத்து ...

Read More »

காதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, சாதாரண பிரஜையான தனது காதலரை ‌விரைவில் கரம் பிடிக்கிறார். மன்னரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் ‌தனது திருமண நிச்சயார்த்தம் ‌நடக்கவுள்ளதாக மகோ மகிழச்சி பொங்க அறிவித்துள்ளார். ‌ ஜப்பான் இளவரசர் ஃபுமி‌ஹிதோவின் மூத்த மகள் தான் இளவரசி மகோ. அர‌ச பரம்பரை வழக்கப்படி அவரை ஜப்பானிய மக்கள் இளவரசி அகிஷினோ என அழைத்து வருகின்றனர். இந்த இளவரசி பட்டம், மரியாதை அனைத்தும் இன்னும் சில மாதங்களுக்கு ...

Read More »

அவுஸ்ரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்!

வங்காளதேசத்தில் அவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக வங்காள தேச காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் அவுஸ்ரேலியா வீரர்கள் கடுமையான காவல் துறை ...

Read More »

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை!

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கௌரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை தனது இல்லத்தில் கௌரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய ...

Read More »