இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஜுன் 6 சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். கடந்த திங்கட்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை அனைத்து ...
Read More »செய்திமுரசு
மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி
காபூலில் உள்ள மசூதிக்குள் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:- செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (1500 ஜிஎம்டி) இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து ...
Read More »ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்காவை அதிரவைக்கும் போராட்டங்கள்!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காவல் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அந்நகர காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் உயிராபத்தை உண்டாக்கும் காயங்கள் அவர்களுக்கு உண்டாகவில்லை. கலிஃபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன. அப்பகுதிகளில் ...
Read More »கொரோனா நியூசிலாந்தின் அனுபவம்
நியூசிலாந்து கொரோனாத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றது. தெளிவு, வேகம், வெளிப்படைத்தன்மை போன்றவைகளை உள்ளடக்கிய தேசபரிபாலனத்தின் அணுகுமுறையே அதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தில் லொக்டவுன் கட்டுப்பாடு ஏழுவாரம் நீடித்தது. அஃது உலகிலேயே கடுமையான லொக்டவுன் எனச் சொல்லப்படுகின்றது. கொரோனாத் தொற்றை எதிர்கொள்வதில் தேசபரிபாலனத்தின் மாண்புகளை நியூசிலாந்து வெளிப்படுத்தியிருக்கின்றது. தெளிவான அரசியல் தலைமை, உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு, சமத்துவமான சுகாதாரச்சேவை, துறைசார்வல்லுனர் குழாம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்படு பாங்கு, அதனை மெருகேற்றியிருக்கின்றது. “சரியானதைச் செய்யவேண்டும். அஃது அறம் வழிப்பட்டதாக இருக்கவேண்டும்” ...
Read More »ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை
இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மின்னசோட்டா தலைநகரான மின்னபோலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபர் காவல் துறையின் பிடியில் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு நீதி வேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததைத் ...
Read More »எமது அரசியல் அபிலாசைகளைக் கைவிடுவது அர்த்தமற்றது!
உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை ...
Read More »வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை ! -கொழும்பிலுள்ள சீன தூதுரகம்
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை ...
Read More »ஆறுமுகனின் திடீர் மறைவு – ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு …….!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரிய முறையில் நிரப்பும் வரையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிர்வாகக் குழுவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் எஸ்.சிவராஜா, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக செயற்பாட்டுக்கான உப தலைவர் எம்.மாரிமுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ...
Read More »யாழ் நூலக எரிப்பு : அரங்கேற்றப்பட்ட இனவாதம் – 39 வருடம் நிறைவு
யாழ் நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல். தீர்மானம் மிக்கதோர் இன அழிப்பு நடவடிக்கை. தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழித்ததோர் இன வன்முறை. அதுவும் ஓர் அரச வன்முறை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்தையடுத்து, வேறு வழியின்றி தனிநாட்டைக் கோருவதைவிட வேறு வழியில்லை என்ற அரசியல் ரீதியான வெறுப்பின் விளிம்பில், தமிழ்த் ...
Read More »காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் 1200 ஆவது நாளை எட்டியது
வவுனியாவில் சுழற்சிமுறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 12.15 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து ...
Read More »