செய்திமுரசு

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்: லட்சுமண்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி அவுஸ்ரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொஅவுஸ்ரேலியாடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. கோலியும், ஸ்டீவன் சுமித்தும் நவீன கால கிரிக்கெட்டில் சிறந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சர்வதேச ...

Read More »

அவுஸ்ரேலியா அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன்

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முன்னணி சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உள்ளூர் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இருவரும் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

அவுஸ்ரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதி (சனிக்கிழமை) தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாலை 6 மணிக்கு, St Jude’s Primary School Hall, 53 George St, Scoresby இல் தியாகி தீலீபனின் 30ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுப் பூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பினை விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் விடுத்துள்ளனர் என்பது ...

Read More »

அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி கிரிக்கெட் சென்னையில் இன்று நடக்கிறது!

அவுஸ்ரேலியா – இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னை சேப்பாக்கக்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ...

Read More »

அவுஸ்ரேலியா, நியூஸி. தொடர்களுக்கான அட்டவணை!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோல் நியூஸிலாந்து தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான -அவுஸ்ரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் திகதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. 21-ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ...

Read More »

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு கூட்டமைப்பு பச்சைக்கொடி!

20ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறியுள்ளார். “20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில ஐயங்களை எழுப்பியிருந்தது. அதாவது மாகாணசபைகள் 5 வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தை நாடாளுமன்றம் பொறுப்பேற்பது என்பதை நாங்கள் எதிர்தோம். அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தை நாடாளுமன்றம் ...

Read More »

விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் விளம்பரம்: அவுஸ்ரேலியா அரசிடம் இந்தியா புகார்

விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போன்ற விளம்பரம் தொடர்பாக, குறிப்பிட்ட விளம்பர நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவுஸ்ரேலியா அரசிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இறைச்சி கால்நடை ஆய்வுகள் நிறுவனம் ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், ஏசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என்று அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகிறார்கள். இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல் அந்த விளம்பர காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவுக்கு ...

Read More »

20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு

இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயாராகும் விக்டோரியா மாநில அரசு

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சுமார் 6 லட்சம் டொலர் நிதியை விக்டோரியா மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு நிதியுதவி மற்றும் தங்குமிட வசதிகளை அண்மையில் அரசு நிறுத்தியிருந்ததோடு, மேலும் இவர்கள் அனைவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தவேலைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதேவேளை விக்டோரியாவில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய வாழ்வாதார உதவிகளுக்காக 6 லட்சம் நிதியினை அரசு ...

Read More »