மீனவர்கள் வருவார்கள்.அப்பொழுது அவர்கள் அரசியல் எல்லைகளை மதிப்பதில்லை. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான கடல் எனப்படுவது இரு பகுதி மீனவர்களாலும் பகிரப்படும் ஒரு பாரம்பரியக் கடலாகும். அதில் பாரம்பரிய மீன்பிடி முறைகளின் மூலம் மீன் பிடிக்கப்படும் வரை பிரச்சினை பெரியளவில் எழவில்லை. மாறாக சட்டத்துக்கு விரோதமான நவீன மீன்பிடி நுட்பங்களை பயன்படுத்தும் ஒப்பீட்டளவில் அளவால் பெரிய தமிழகப்படகுகள் ஈழத்துக் கடற்பரப்புக்குள் நுழைந்த போதுதான் அது முதலாவதாக வள அபகரிப்பாக மாறுகிறது.இரண்டாவதாக சூழலியல் விவகாரம் ஆகிறது.மூன்றாவதாக சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்துவதால் அது ஒரு சட்டப்பிரச்சினையாக மாறுகிறது.இவை அனைத்தினதும் ...
Read More »செய்திமுரசு
வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலகுமா?
வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீனாவும், ரஷியாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றன. வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. சபை தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்துள்ளன. இவற்றை தற்காப்பு நடவடிக்கை என்று அந்த நாடு கூறி வந்தாலும்கூட இது உலகளாவிய அச்சுறுத்தல் என்று வளர்ந்த நாடுகள் கருதுகின்றன. வடகொரியா முதன்முதலாக 2006-ம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோதுதான் ...
Read More »அரசாங்கத்துக்கு எதிராக அணி திரண்டனர்
தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக துறைமுகங்கள், மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், கொழும்பில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை, கல்வியாளர்களை குரோதப்படுத்துவதையும் மாணவர்களை சிரமப்படுத்துவதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி பெற்றோர்களும் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (03) போராட்டம் நடத்தினர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராகவும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கும் எதிராகவே பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை பிரதான ...
Read More »இறுதி மூச்சுவரை போராடுவோம்
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதும் பாதுகாப்பு தரப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் தங்களது பாதுகாப்பினை மட்டும் உறுதி செய்து கொண்டனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த கட்டுவாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு ...
Read More »ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; 702 பேரிடம் விசாரணை
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ஐ.எஸ் உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 702 இலங்கையர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது சம்சுதீன் அண்மையில் இந்திய அரச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 702 இலங்கையர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக அவரது வட்ஸ்அப் கணக்கில் தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குண்டுதாரியான சஹாரான் ஹாஷிமின் புகைப்படங்கள் மற்றும் உரைகளும் ...
Read More »முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்
ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின. தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொதுவெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு ...
Read More »கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி
வெளிநாடு பயணிகளின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார மையம் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, சிகிச்சை முறை பொருட்கள் நிர்வாகம் (டிஜிஏ), ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாவது:- சர்வதேச அளவில் பயன்பாட்டில் ...
Read More »தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கி முன்வைக்கும் ஒரு கோரிக்கை?
வரும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிக் கதைக்கவிருக்கின்றன.விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி;ஈபிஆர்எல்எப்;டெலோ;புளட் இவற்றோடு ஸ்ரீகாந்தா தலைமையிலான கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுமே அவ்வாறு கூடிக்கதைக்க இருக்கின்றன.இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் தமிழரசுக் கட்சி இச்சந்திப்பில் பங்குபெற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறியமுடிகிறது.பெரியதும் மூத்ததுமாகிய தமிழரசுக் கட்சி டெலோ இயக்கத்தின் முன்முயற்சி ஒன்றின் பின் இழுபட்டு செல்ல விரும்பவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்கு கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தரின் ஆதரவு உண்டா என்பதையும் இக்கட்டுரை எழுதப்படும் ...
Read More »தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என்கிறார் ஞானசார தேரர்
ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தாலும் இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கின்றார்களா முஸ்லீம்கள்இருக்கின்றாhகளா என கேட்கின்றார்கள் என தெரிவித்துள்ள அவர் ஏன் அப்படி கேட்கின்றார்கள் திறமையே முக்கியமானது திறமைக்கு வாய்ப்பளிக்கும்போது தமிழர் முஸ்லீம் சிங்களவர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார். கண்டி தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அதனை யாழ்ப்பாண தமிழர்கள் ...
Read More »குற்றங்களைப் புரிந்தவர்களும் குற்றங்களுக்குப் பங்கானவர்களும் குற்றவாளியைத் தேடுகிறார்களா?
இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தவேளை அதில் பங்காளியானவர்கள் இன்று மனித உரிமை மீறல்களையும், மனிதகுல விரோத செயற்பாடுகளையும் விசாரிக்க முன்னிற்கின்றனர். இத்தகைய நாடுகள் பற்றி அமெரிக்க வெளியுறவு முன்னாள் செயலாளர் தெரிவித்த கருத்து, ‘நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் மட்டுமே நாடுபவை” என்பது. முக்காலமும் பொருந்தும் இவ்வாசகம் தமிழர் மனதில் எக்காலமும் கல்வெட்டாக இருக்க வேண்டியது. தமிழர் தேசத்தையும் தமிழ்த் தேசியத்தையும் முன்னிறுத்தி இடம்பெறும் பல செயற்பாடுகள் இக்காலத்தில் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே சில விடயங்களில் முக்கிய வகிபாகத்தை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal