சிநிலங்காவில் இரண்டு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு இடங்களில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள ஆலயம் ஒன்றிலும், நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. முதற்கட்டமாக 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Read More »செய்திமுரசு
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!
02 ஆம் இணைப்பு இன்று ஆறு இடங்களில் நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 102 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Read More »அவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி!
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது. அங்கிருந்து எப்படி வெளியேறுவது எனத் திக்குமுக்காடிய நேரத்தில், அற்புதமான யோசனை அவர்களுக்குத் தோன்றியது. உதவி நாட HELP எனும் வார்த்தையை அவர்கள் சேற்றில் செதுக்கினர். அதன் அருகில் இருந்த பகுதியில் தீ மூட்டினர். அந்தச் செயல் பலன் தந்தது. அந்த வழியே பறந்து சென்ற தேடல், மீட்பு விமானம், அந்த ...
Read More »பெண்மையை போற்றும் தமிழர்!
நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம். பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு ...
Read More »ஊடகவியலாளர் தயாபாரன் மீது தாக்குதலா?
யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ர ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிலில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த நபர் ஒருவர் மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அச்சுவேலி காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்கல் புலம்பெயர் சமுகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கான உடுப்பிட்டிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார். குறித்த சம்பவம் சாதாரண ...
Read More »தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்!
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். அதை மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் ...
Read More »அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததா என்பது பற்றி விசாரணை நடத்திய விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்ப்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ...
Read More »அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி!
டிரம்ப்-கிம் ஜாங் அன் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது. ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா. உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ...
Read More »மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி!
சிறிலங்கா ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிர்செய்யப்பட்ட ...
Read More »தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும்போது பயனற்றுப்போகின்றது !-இந்திய பாடகி ஸ்ரீநிதி
இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஒழுங்கமைத்துள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வவுனியா வந்துள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்காக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை கலைஞர் கடின உழைப்பாளிகள். குறிப்பாக இந்தியாவை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal