செய்திமுரசு

‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவும்!

இலங்கையின் ‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை தெரித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் தேசிய விவசாயத்தை பலப்படுத்த இப்போதே பல வேலைத்திட்டங்களை ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178

இலங்கையில் இன்று (06.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது வைத்தியசாலையில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான ; 34 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

கொரோனா வைரசால் தள்ளிப்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் திருமணங்கள்

கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டியை மட்டும் நிறுத்தவில்லை, ஆஸ்திரேலிய வீரர்களின் திருமண நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் மீண்டும் கிரிக்கெட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீரர்கள் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதோடு மட்டுமல்ல ஆஸ்திரேலியா வீரர்களின் திருமண நிகழ்ச்சிகளும் தள்ளிப்போகியுள்ளன. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, பெண்கள் அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சன், ஜேக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரிவ் ...

Read More »

கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்!

கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென இங்கிலாந்து மக்களுக்கு ராணி 2-ம் எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4,500-ஐ எட்டியுள்ளது. இந்த கொடிய வைரஸ் அந்த நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சான் ஆகியோரையும் விட்டுவைக்கவில்லை. இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசில் ...

Read More »

புலிக்கு கொரோனா வைரஸ்!

அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார்  3,36,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.  ஆனால், ...

Read More »

கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். கண்களுக்குத் தெரிகிற எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாத எதிரிகள்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்வது உண்டு. அது கொரோனா வைரசை பொறுத்தமட்டில் 100 சதவீதம் உண்மை. அதனால்தான் இந்த உலகமே அதிர்ந்து போய் கிடக்கிறது. இந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத பேய், தாக்க வருவதற்கு முன் தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறது. இந்த ...

Read More »

செல்வம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம்!

யுத்தத்தின் போது ‘செல்’ துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் ...

Read More »

இலங்கையில் 12 பகுதிகள் முற்றாக முடக்கம் ! அதிக கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ; இந் நிலையில் 9 சிறார்கள் உட்பட 140 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!

அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த  52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த்

இலங்கையின் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றபோதும் அடுத்துவரும் காலத்தின் எவ்வாறான நிலைமகள் இருக்கப்போகின்றது என்பதை கணிக்கமுடியாது. எனினும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வருவது உறுதியாக இருக்கின்றபோதும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வரையறுக்க முடியாது என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தான நிலைமைகள் எவ்வாறுள்ளன? ...

Read More »