செய்திமுரசு

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும்!

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் திகதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே ...

Read More »

நாளை யாழில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கின்றனர் ஊடகவியலாளர்கள்!

யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் போராட்டமானது நாளை(30) காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புகளுக்கும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More »

செல்வராசா இராஜேந்திரன் தாக்கப்பட்டமை மீண்டும் ஊடகத்திற்கான எச்சரிக்கையா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று(28) திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோவென யாழ்.ஊடக அமையம் சந்தேகம் கொண்டுள்ளது. பிரதேச செய்தியாளரும், பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் கோருகின்றது. தெற்கில் முன்னைய ஆட்சியாளர்கள் கதிரைக்கனவுடன் அலைந்து திரிய அவர்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றினால் ஊடகவியலாளர்கள் படுகாலை செய்யப்படுவரென தற்போதைய ஆட்சியாளர்கள் எச்சரிக்கை ...

Read More »

பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில்!

அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சியான லேபர் கட்சியை விட மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு பின்தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக் கணிப்பினை விடவும் லேபர் கட்சி ஒரு புள்ளியால் முன்னேற்றம் அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதேவேளை மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக மால்கம் டர்ன்புல் தொடர்ந்து முன்னேற்றம் ...

Read More »

யாழில் மரங்கள் நட இராணுவத்துக்கு அனுமதியில்லை!

யாழ்.நகரைப் பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஜுன் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள மரநடுகைத் திட்டத்தில், இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று (28) நடைபெற்றது. அதில் சபை உறுப்பினர் வி.மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Read More »

வடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி ஜூன் 12 பேச்சுவார்த்தை!

ஜூன் 12-ந் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட திகதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் திகதி சந்தித்து பேச முடிவு ...

Read More »

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் கடந்த வாரம் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், படுகொலையைக் கண்டிக்கும் படங்களுடன் கூடிய பாதாகைகைளைத் தாங்கியிருந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

Read More »

யாழ்ப்­பா­ணத்­தில் ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­று 12 பேர் …..!

‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்ட 12 பேர் யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் நோய் குறித்து மேல­தி­கப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்று யாழ்ப்­பா­ணப் பிராந்­திய தொற்று நோய் தடுப்­புப் பிரிவு அதி­காரி மருத்­து­வர் ஜி.ரஜீவ் தெரி­வித்­தார். ‘‘பன்­றிக் காய்ச்­சல் எனப்­ப­டும் ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறி­கு­றி­க­ளோடு கடந்த சில வாரங்­க­ளில் 12 பேர் அடை­யா­ளம் காணப்­பட் டுள்­ள­னர். அவர்­க­ளின் குருதி மாதி­ரி­கள் பெறப்­பட்டு மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன. தற்­போ­தைய கால­நிலை இந்த நோய் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பாக இருக்­கின்­றது. 2008 ...

Read More »

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்றவரை காணவில்லை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் கொடிகாமம் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என்பவரே இவ்வாறு காணமால் போயுள்ளார். கடந்த 21 ஆம் திகதி கொழும்பிற்கு செல்வதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அயர்லாந்து முடிவு !

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவாக 66 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து ...

Read More »