செய்திமுரசு

அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் விக்னேஸ்வரன் சந்திப்பு!

அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் Victoria Coakley இன்று வந்து என்னைச் சந்தித்தார். உயர்ஸ்தானிகருக்கு கொழும்பில் பல வேலைகள் இருப்பதால் தன்னை அனுப்பியதாகக் கூறினார். பொதுவாக இன்றைய மத்திய அரசாங்கத்தின் நிலை பற்றியும் வடமாகாணத்தின் அரசியல் நிலை பற்றியும் அறிந்து கொள்ளவே தாம் இங்கு வந்ததாகக் கூறியிருந்தார். மத்திய அரசாங்கத்தில் தற்போது நிர்வாக ரீதியாகவும் வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் நிலை பற்றி நாங்கள் இருவரும் ஆராய்ந்தோம். தற்போதைய நிலையில் எவ்வாறு மத்திய அரசாங்க அரசியல் நடவடிக்கைகள் கொண்டு செல்லப்படலாம் என்று அவர் எனது கருத்தைக் கேட்டார். ...

Read More »

பதவி விலகினார் எரிக் சோல்ஹிம்!

ஐநா நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை ...

Read More »

வவுனியாவில் வாள்வெட்டு! இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.   தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது 20) , ராஜரட்ணம் (வயது 20) ஆகிய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் ...

Read More »

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை!

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “சமகாலத்தில் உள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேரம் பேசக் கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. எவரை ஆதரித்தால் தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா? ...

Read More »

என் பிள்ளைகளுக்கு ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று கூடத்தெரியாது!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எனது மகன்மார் இருவரும் அப்பாவிகள் என்றும் அவர்கள் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டது எனக் கூறுவது சுத்தப் பொய் என்று கைதான சகோதரர்களின் தந்தை கூறியுள்ளார். மெல்போர்னில் பொதுமக்கள் பரவலாக உள்ள இடத்தில் துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் இன்று (20) அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...

Read More »

‘அவதந்திரம் தனக்கு அந்தரம்’

‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை வீச்சில், புலிகளில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளனர்’. இவை, பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றாடச் செய்திகள் ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரின் தாக்குதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர் என்பது, இன்றைய செய்தி ஆகும். கலைகளை வளர்க்கும் கலா மன்றங்கள், வாசிப்பு, பொது வேலைகளை ஊக்குவிக்கும் சனசமூக நிலையங்கள், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிராம அபிவிருத்தி மன்றங்கள் எனப் பல அமைப்புகள் நாட்டில் ...

Read More »

திருகோணமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தந்தை காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசுயற்துறைப் பொறுப்பாளராகத் திகழ்ந்து வந்த எழிலன்(சசிதரன்) அவர்களது தந்தையார் கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை அவர்கள் நேற்று மரணமடைந்துள்ளார். போரின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் குடும்பத்தார் முன்னிலையில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எழிலன் அவர்களது தந்தையாரின் உடல் கிளிநொச்சியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாக்கிழமை இடம் பெறவுள்ளது.

Read More »

யாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு!

யாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த இளை­ஞரை வீதி­யில் சென்­ற­வர்­க­ள் மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் அனுமதித்துள்ளனர். அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வாடி வீட்­டுக்கு அண்­மை­யில் குறித்த இளை­ஞன் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வீதி­யோ­ரம் வீழ்ந்து கிடந்­துள்­ளார். அதன் போது அந்த வீதி­யில் சென்ற முச்­சக்­கர வண்­டிச் சாரதி அதை அவ­தா­னித்­து. வீதி­யில் வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டிச் சார­தி­யும் இணைந்து அவ­சர நோயா­ளர் காவு வண்­டிச் சேவைக்கு அறி­வித்­துள்­ள­னர். .இதனையடுத்து சம்­பவ இடத்­துக்கு சென்ற ...

Read More »

அரசியல் நெருக்கடியை தொடக்கிவைத்தவரே முடித்துவைக்கவும் வேண்டும்!

எவரும் எதிர்பார்க்காத முறையில் அக்டோபர் 26 மூண்ட அரசியல் நெருக்கடி இன்னமும் தொடருகிறது. இப்போது அது நான்காவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த எதிர்பாராத தீர்மானம் சந்தேகப்படாதிருந்த ஒரு நாட்டின் மீது பிரச்சினையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராஜபக்ச பிரதமர் என்ற வகையில் தனது புதிய பதவியை சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க இயலாதவராக இருப்பதே இன்றுள்ள பிரச்சினையாகும். கடந்த ...

Read More »

எதை பாதுகாக்க சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்? லசந்தவின் மகள் மைத்திரிக்கு கடிதம்

முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார். லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்,உங்கள் முப்படைகளின் பிரதானியை ...

Read More »