திரைமுரசு

முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்

படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்று நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு தனது வேதனையை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அறுதுல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் ...

Read More »

கடல் அலைகளுடன் மோதி விளையாடும் பிகில் பட நடிகை

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கடல் அலைகளுடன் மோதி விளையாடும் சர்ஃப் பயிற்சி எடுத்து வருகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இப்படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை   தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி கற்று வருகிறார். கடல் அலைகளுடன் ...

Read More »

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஸ்ரேயா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் ...

Read More »

அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் பிரபல பாடகி

ட்ரெண்ட் லவுட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாடகி நடிக்கிறார். ட்ரெண்ட் லவுட் நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது அடுத்த ஆச்சர்யமாக, இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாடகி உஷா ...

Read More »

2 கோடி ரூபாய் கொடுத்து தத்தெடுத்த பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வனப்பகுதியை தத்தெடுத்து இருக்கிறார். ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் ...

Read More »

இமைபோல் காப்பேன் – காதல் மனைவி குறித்து ஆரவ் உருக்கம்

நடிகர் ஆரவ்வுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில், அவர் தனது காதல் மனைவி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன்அவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 6-ந் ...

Read More »

பிக்பாஸ் 4-ல் கலந்துக் கொள்ளும் பிரபல நடிகையின் சகோதரர்

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல நடிகையின் சகோதரர் கலந்து கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்த தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் 2வது புரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இரண்டாவது புரமோவிற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டி நடனம் அமைத்தார். இதனையடுத்து தமிழ் பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் பற்றிய ...

Read More »

எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா

எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கூறி இருக்கிறார். நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- “எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. ஆனால் இதற்கு முன்பு நடித்த கதை சாயலில் மீண்டும் நடிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். கொரோனாவில் எல்லோரும் கஷ்டத் தில் இருக்கிறோம். இந்த கஷ்டகாலம் விரைவில் முடிவுக்கு வந்து அனை வரும் மகிழ்ச்சியாக இருக்க ...

Read More »

மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ...

Read More »

காதலியை கரம்பிடித்தார் பிக்பாஸ் ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், தனது காதலி ராஹியை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆரவ்வுக்கு, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஆரவ்வும் ...

Read More »