திரைமுரசு

அஸ்வின் பதிலால் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் அஸ்வின் பேச்சால், சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ந்துவிட்டார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானது வேறு எதுவுமில்லை எனலாம். சமையல் நிகழ்ச்சியுடன் இணைத்து காமெடி என்று இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு வித்தியாசமானது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் பிரபலமானவர் அஸ்வின். இன்றைய (ஜனவரி 10) நிகழ்ச்சி பொங்கல் கொண்டாட்டமாக இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ...

Read More »

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு “பொன்னியன் செல்வன்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட செட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத் விரைந்துள்ளனர். ...

Read More »

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் செல்வராகவன் திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனின் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் இப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக ...

Read More »

திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்த 9 நடிகைகள்

பிரபல நடிகைகளாக இருக்கும் ஒன்பது பேர் மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்திருக்கிறார்கள். மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை நடிகைகள் சுஹாசினி, உமா பத்மநாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனுஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ ஆகிய 8 நடிகைகள் இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு நடிகை ஷோபனா நடனம் ஆடி உள்ளார். இதுகுறித்து சுஹாசினி கூறும்போது, “மார்கழித் திங்கள் தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக தொழில் ரீதியிலான பாடகர்கள் அல்லாத நாங்கள் ...

Read More »

அஜித் படத்தில் சின்னத்திரை பிரபலம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹூமா குரேசி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய விபரங்களை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே, தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் ...

Read More »

விதார்த்தோடு இணைந்து நடித்த கார்

மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான விதார்த், அடுத்ததாக நடித்திருக்கும் படத்தில் காரும் இணைந்து நடித்து இருக்கிறது. செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம். இப்படம் குறித்து இயக்குனர் கே எல் கண்ணன் கூறும்போது, ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும், டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது. ...

Read More »

நடிகராக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் சாம்ஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாம்ஸ். இவருடைய மகன் தற்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்து சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் யோஹன் நடிப்பு பயிற்சியும், இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க ...

Read More »

விஷாலை இயக்கும் குறும்பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலின் அடுத்த படத்தை குறும்பட இயக்குனர் இயக்க இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் விஷால். இந்த படத்தை எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த து.ப.சரவணா இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. மற்ற தொழில்நுட்ப ...

Read More »

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது

அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ ...

Read More »

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான்.  இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் ...

Read More »