திரைமுரசு

ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல… மனித வதை – பாரதிராஜா

ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல, அது மனித வதை என்று இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று ...

Read More »

போராடி கிடைத்த புகழ் வாழ்க்கை

துபாயின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் நைலா அல் காஜா. திரைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய சிறுவயது கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை நிஜமாக்க இவர் பெரும் போராட்டம் நடத்தியிருக்கிறார். துபாயில் வசித்து வரும் இவர், தன்னுடைய போராட்ட வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்கிறார். ‘‘என் இளமை பருவம் மிகவும் மகிழ்ச்சியானது. அப்பா அடிக்கடி வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று விடுவார். அவருக்கு திரைப்படங்கள் பிடிக்கும். அதனால் அவரிடம் நிறைய திரைப்படங்களின் தொகுப்பு இருந்தது. அவைகளுள் இந்திய திரைப்பட ...

Read More »

அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது

காசநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது வழங்கியது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது. அதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க அரசின் விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும், இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ...

Read More »

‘தங்கல்’ வெளியான 16 நாட்களில் ரூ.330 கோடி வசூல்

அமீர்கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.330 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ்  விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப்  பாராட்டுப்படுகிறது. படம் வெளியாகிய முதல் 16 நாட்களில் ‘தங்கல்’ இந்தியாவில் மட்டும் ரூ.330 கோடிகளை வசூலித்து  சாதனை ...

Read More »

கணவரை பிரிய தனுஷ் காரணமா?

கணவர் ஏ.எல்.விஜயை பிரிய தனுஷ் காரணம் என்று கூறப்பட்டதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். அமலாபால் அவரது கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் தனுஷ் என்று முன்பு புரளி கிளம்பியது. இதற்கு  அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்… “ நானும் என் கணவர் விஜய்யும் விவாகரத்து கேட்டு பிரிந்ததற்கு காரணம் தனுஷ் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை  இல்லை. இந்த வி‌ஷயத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானும் விஜய்யும் பிரிய முடிவு செய்ததை அறிந்த  தனுஷ் ...

Read More »

பழைய காலத்து காதலே உயர்வானது

“செல்போன், வாட்ஸ்-அப் வசதி இல்லாத பழைய காலத்து காதலே உயர்வானது” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “இந்த காலத்து காதல் செல்போன்-வாட்ஸ்அப் யுகத்துக்கு மாறி, காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை எனது தந்தை கமல்ஹாசன் சொல்லி கேள்விப்பட்டபோது வியப்பாக இருந்தது. போன் வசதி இல்லாத அந்த காலத்து காதலர்கள் சந்தித்து பேசுவது சுலபமானதாக இருக்கவில்லை. ...

Read More »

“அன்று சுஜாதா சொன்னது, இன்று நிஜமாகிறது!’’ – கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து…. வளர்ந்து வரும் சினிமா இளைஞர்களில் நம்பிக்கையானவர்.  கவிதைகளில் தனது தடத்தை பதித்தவர்… நாவலிலும் கவனிக்க வைத்தார். நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மிளிர்ந்தார். தற்போது பல படங்களுக்கு திரைக்கதை அமைப்பது, வசனம் எழுதுவது, பாடல் எழுதுவது என கபிலன் செம பிஸி. தற்போது டி.ஆர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘கவண்’ படத்திற்கு எழுத்தாளர் சுபா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் இணைந்து கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார். இந்த படத்தில் மூன்று பாடல்களையும் எழுதி இருக்கிறார். “இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் வேலை செய்யும் ...

Read More »

சாவித்திரி வாழ்க்கை வரலாறு – 2 கதாநாயகிகள்

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் 1950, 60 மற்றும் 70-களில் 310-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, சினிமா படமாக தயாராகிறது. பாசமலர், தேவதாஸ், திருவிளையாடல், குறவஞ்சி, கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, கர்ணன், பரிசு, களத்தூர் கண்ணம்மா என்று சாவித்திரி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ...

Read More »

எஸ்-3 படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும்

“எஸ்-3“ படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார். திரைப்பட இயக்குனர் ஹரி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து உள்ளனர். புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ...

Read More »

திறமையான நடிகைகளால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்!

“நயன்தாரா, திரிஷா, கரீனாகபூரை போன்று திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்” என்று தமன்னா கூறினார். இதுகுறித்து ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- “எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன். நிறைய காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்கிறேன். முட்டை சாப்பிடுகிறேன். பருப்பு ...

Read More »