திரைமுரசு

உணவின் விலையோ மலிவு; தரமோ அருமை! – சொந்த தொகுதியில் கலக்கும் எம்.எல்.ஏ ரோஜா

நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, தன் நகரி தொகுதியில் மலிவு விலை உணவகம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து உற்சாகமாகப் பேசுகிறார் ரோஜா. “சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்க முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருந்தாங்க. அதனால், நிறைய ஏழை மக்கள் பயனடைஞ்சாங்க. அத்திட்டத்தின் பலனை நானே தமிழ்நாட்டில் பலமுறை பார்த்தேன். அதுபோன்ற மலிவு விலை உணவகத்தை என் தொகுதியில் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். நெசவாளர்கள், கட்டடப் பணியாளர்கள்னு என் தொகுதியில் தினக்கூலி ஏழை மக்கள் அதிகம் ...

Read More »

26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்

65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில், 26 சர்வதேச விருதுக்களையும் வென்றுள்ளது. 65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது ...

Read More »

சாகும் வரை உன்னைக் காதலிப்பேன்!-ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி தன் திருமண நாளில் கணவர் ராஜ் குந்த்ராவை வாழ்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷில்பா ஷெட்டி, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உன் ஆச்சரியங்கள், செயல்கள், பெரிய மனதுக்கு ஈடாக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமான, சரியான ஜோடி. அதற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். சாகும் வரை உன்னைக் காதலிப்பேன். அதற்குப் பிறகு வாழ்க்கை இருக்குமென்றால் அப்போதும் காதலிப்பேன். மகிழ்ச்சியான 9-வது ...

Read More »

திருடப்பட்டதாக புகார்: சர்ச்சையில் ‘திமிரு புடிச்சவன்’ கதை!

திமிரு புடிச்சவன் கதை திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.தமிழ் பட உலகில் கதைகள் திருட்டு சர்ச்சைகள் தொடர்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் ‘சர்கார்’ விஜய்சேதுபதியின் ‘96’ ஆகிய படங்கள் இதில் சிக்கின. 96 கதை தனது உதவியாளர் எழுதிய கதை என்று இயக்குநர் பாரதிராஜாவே கூறினார். சர்கார் கதையை எதிர்த்து நீதிமன்றில்  வழக்கு தொடர்ந்து பிறகு சமரசம் ஆனார்கள். இந்த பிரச்சினையில் பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதிவியையே ராஜினாமா செய்யும் நிலைமை ஏற்பட்டது. இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ...

Read More »

‘கஜா’வின் கோர தாண்டவம்! – தங்கர் பச்சான் காணொளி

‘கஜா’ புயலின் கோர தாண்டவத்தைப் பற்றிய காணொளிப் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார் தங்கர் பச்சான். கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 15) நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புயலால் 45 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ...

Read More »

ஏன் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்டீங்களே!-சின்மயி

இவ்வளவு ஆண்டுகள் ஏன் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்டீங்களே, இப்போது என் நிலையை பாருங்கள் என்று சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். பிரபல பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தார். ஒரு விஷயம் நடந்தால் உடனே சொல்ல வேண்டியது தானே, அது ஏன் இத்தனை ஆண்டு காலம் கழித்து சொல்ல வேண்டும் என்று பலரும் சின்மயி நோக்கி கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் சின்மயி மீது ...

Read More »

அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு!

சிங்கப்பூர் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின்  மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச்  சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு. ...

Read More »

காற்றின் மொழி!-விமர்சனம்

பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே ‘காற்றின் மொழி’. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த ...

Read More »

‘‘வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசு ஆராத்யா ’’ -அபிஷேக் பச்சன்

வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசை அளித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் அபிஷேக் பச்சன். பாலிவுட்டின் பிரபலத் தம்பதி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். இருவரும் இன்று (நவ.16) மகள் ஆராத்யா பச்சனின் 7-வது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், ”குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயைக் கொண்டாடாமல் முடிவடையாது. மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பைச் செலுத்துவதற்கு, அவளைப் பார்த்துக் கொள்வதற்கு.. எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு…! என்னுடைய திருமதிக்கு – வாழ்க்கையின் ...

Read More »

தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம்!

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ...

Read More »