ராஜாவுக்கு செக் படத்தில் சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரி. அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த பிரச்னையிலிருந்து அவர் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இதன் இன்னொரு பகுதி அந்த பிரச்னை பற்றி ஒவ்வொரு பெண் குழந்தையை ...
Read More »திரைமுரசு
தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகைகளில் தமிழ் பேச தெரிந்தவர்கள் மட்டும் அல்ல தெளிவாக பேச தெரிந்தவர்களும் மிக குறைவே… தற்கால நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த குறையை போக்குகிறார். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மத்த மொழி ஹீரோயின்கள்தாம் தமிழ்ல நடிச்சிக்கிட்டு இருக்காங்க. முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க. நாம ஓர் அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களைச் ...
Read More »திருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் – ராதிகா ஆப்தே
திருமணத்தின் போது தனது பாட்டியின் கிழிந்த புடவையை அணிந்து கொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வருகின்றன. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்தனர். லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை 2012-ல் பதிவு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த ...
Read More »இசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா!
காற்றின்மொழி, லட்சுமி உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடிய ஸ்வாகதா, தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். காற்றின்மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருப்பவர் பாடகி ஸ்வாகதா. இவர் தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். ஸ்வாகதா இசையமைத்து, நடித்த ...
Read More »டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபல குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு ...
Read More »96 பட வாய்ப்பை நழுவவிட்ட மஞ்சு வாரியர்!
மலையாளத்தில் மிகவும் பிரபலமாகி, தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகமான மஞ்சுவாரியர், 96 பட வாய்ப்பை நழுவவிட்டதாக கூறியிருக்கிறார். மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, ‘இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ்தான் காரணம். அவர்தான் என்னை இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தார். அதே சமயம் இந்த படத்துக்கு முன்பாகவே தமிழில் 96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் திரிஷா வேடத்தில் முதலில் என்னிடம்தான் நடிக்க ...
Read More »காதலனுக்கு விருந்து கொடுத்த ஸ்ரீதேவி மகள்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தன்னுடைய காதலர் இஷானுக்கு பிரியாணி செய்து விருந்து கொடுத்திருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தன் அம்மாவின் ஆசைப்படி சினிமாவுக்கு வந்துவிட்டார். தடக் படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் அடிக்கடி பொது இடங்களுக்கு வந்து ரசிகர்களின் கண்ணில் பட்டுவிடுகிறார். அவர் பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பி நடிகர் இஷான் கட்டாரை காதலித்து வருவதாக வதந்தி பரவியது. இந்நிலையில் ஜான்வி ஷாகித் கபூர், அவரின் மனைவி மீரா ராஜ்புட் மற்றும் இஷானை அழைத்து அவர்களுக்கு சிவப்பு ...
Read More »ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை!- பிரியங்கா சோப்ரா
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது. ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்து உள்ளார். ஏற்கனவே நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறும்போது, “இனிமேல் ...
Read More »தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை!!
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் சாதனை படைத்துள்ளார். நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார். துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார். கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். சமீபத்தில் ...
Read More »இணைய தொடரில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம்!
நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள வெப் சீரியஸில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய வெப் சீரியஸ் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’. 4 குறும்படங்கள் அடங்கிய இந்த வெப் சீரியஸை அனுராக் காஷ்யப், சோயா அக்தர், தீபகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் இயக்கியிருந்தார். இதில் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மனிஷா கொய்ராலா, விக்கி கெளசல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த வெப் சீரியஸை தெலுங்கில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம். இதற்கானப் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal