96 பட வாய்ப்பை நழுவவிட்ட மஞ்சு வாரியர்!

மலையாளத்தில் மிகவும் பிரபலமாகி, தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகமான மஞ்சுவாரியர், 96 பட வாய்ப்பை நழுவவிட்டதாக கூறியிருக்கிறார்.

மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, ‘இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ்தான் காரணம். அவர்தான் என்னை இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தார்.
அதே சமயம் இந்த படத்துக்கு முன்பாகவே தமிழில் 96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் திரிஷா வேடத்தில் முதலில் என்னிடம்தான் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் பிரேம்குமாரால் என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றார். இந்த தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
மஞ்சு வாரியர்
என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் 96 படத்தில் நடித்திருப்பேன். ஆனாலும் திரிஷா இந்த வேடத்தில் நன்றாக நடித்திருந்தார். அவரை தவிர வேறு யாராலும் இந்த வேடத்தில் நியாயம் செய்திருக்க முடியுமா என தெரியவில்லை’ என்றார்.