திரைமுரசு

முன்னணி நாயகர்களுடன் ஜோடியாகும் ராஷி கண்ணா!

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ...

Read More »

பாலிவுட் படங்களில் நடிக்க அஜித்திற்கு அழைப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித்திற்கு பாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள அஜித்தின் நேர் கொண்ட பார்வை, திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ...

Read More »

ரஜினி வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது ரஜினி படத்தின் வில்லனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. அவ்வப்போது பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து பாலிவுட்டில் கமோசி என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாசுதின் சித்திக் நடிக்கும் ‘போலே சுடியான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். நவாசுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் ...

Read More »

பொன்னியின் செல்வன்’ படத்தில் பார்த்திபன், ஜெயராம்?

கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதன் திரைக்கதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராமை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் வேடத்துக்கு ...

Read More »

குஷ்பு-காயத்ரி ரகுராம் மோதல்!

நடிகைகள் குஷ்புவும், காயத்ரி ரகுராமும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர். நடிகைகள் குஷ்புவும், காயத்ரி ரகுராமும் அரசியல் சமூக விஷயங்களை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிடுகின்றனர். விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் திருடியதாக 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை சிலர் பிடித்து ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. அந்த இளைஞரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்துபோனார். ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி வற்புறுத்திய வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினர். குஷ்பு தனது ...

Read More »

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?

விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார். விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது. இதனிடையே, அமலா பால் தயாரிப்பு நிறுவனத்திடம் நட்புரீதியாக இருக்கவில்லை என கூறி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், ...

Read More »

அசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி…’ என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருக்கிறார். ...

Read More »

அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்!

நடிகை அமலாபாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன. இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்துள்ளனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோல் ...

Read More »

பதற்றம், விறுவிறுப்பாக செல்லும் “செவன்” !- விமர்சனம்

நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். நந்திதாவின் கணவர் புகைப்படத்தை பார்த்த ரகுமானுக்கு அதிர்ச்சி. ஏற்கனவே அனிஷா அம்புரோஜும் ஹவிஷ் தனது கணவர் என்றும், காணாமல் போய்விட்டார் என்றும் புகார் அளித்து இருக்கிறார். இதுபோல் வாய்பேச முடியாத இன்னொரு பெண்ணும் ஹவிஷ் தனது கணவர் என்கிறார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உறுத்த ஹவிஷ் மீது பெண்களை ஏமாற்றி மோசடி ...

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களா?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். இந்தியில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் ...

Read More »