திரைமுரசு

புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கில் சாதனை படைத்துள்ளது. மலையாள ஹீரோவான துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அழகான பெண்கள் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றது.  இந்தநிலையில் இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப்படத்திற்கு தெலுங்கு பார்வையாளர்களிடம் இருந்த வரவேற்பால் டிஆர்பி ரேட்டிங் 7.1ஐ ...

Read More »

எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா

தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஓவியா எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் நடிகை ஓவியா. அதன்பின் சில படங்களில் நடித்த ஓவியா, பிக் பாஸ்  நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். நடிகை ஓவியாவிற்கு இணையத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளிப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரை பின் தொடரவில்லை என்று கேட்டார். ...

Read More »

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா

பெண்குயின், சிந்துபாத் படங்களில் நடித்த லிங்கா, சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்தவர் லிங்கா. இவர் நடிப்பில் தற்போது தடயம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மணி கார்த்திக் இயக்கியுள்ளார்.  இப்படம் குறித்து மணி கார்த்திக் கூறும் போது, ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு  இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன். சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை  ஒன்றைச் செய்யத் ...

Read More »

விஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.  மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் ...

Read More »

சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்

சமூக அவலங்களைப் பற்றி நடிகர் பிரசன்னாவும் சேரனும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.நடிகர் பிரசன்னா சமூக விஷயங்கள் பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அறந்தாங்கி அருகே ஜெயப்பிரியா என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.  இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது. அதில் நடிகர் நடிகைகள் கண்டனங்களை பதிவு செய்தனர். ...

Read More »

அருண் விஜய்யின் வில்லன் நடிக்கும் பிதா

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் பாக்ஸர் படத்தின் வில்லன் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன், அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை தொடர்ந்து தற்போது, ‘சவரக்கத்தி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் ‘பிதா’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன். மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘பிதா’ படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ...

Read More »

சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, ப்ரெண்ட்ஷிப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.  அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.  படத்தின் பர்ஸ்ட் ...

Read More »

எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷெரின், ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதுகுறித்து ...

Read More »

போதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை

பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர். ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து ...

Read More »

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. ...

Read More »