“சிவகாமி, பிங்களத்தேவன், பல்லாளத்தேவன், தேவசேனா, பாகுபலி என ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் எனது அப்பா சொன்னபோது சிறுகுழந்தை மாதிரிக் கேட்டேன். அதற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு அகலவில்லை. அப்பா சொன்னபோது நான் என்ன நினைத்தேனோ, அதை அப்படியே படம் பார்க்கும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கிய படம்தான் ‘பாகுபலி 2′ ” என்று பேசத் தொடங்கினார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. ‘பாகுபலி’ ஒரே கதைதான். ஏன் அதை இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்தீர்கள்? ஒரே கட்டமாக ...
Read More »திரைமுரசு
சிலை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த கீர்த்தி சுரேஷ்
உலகின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்துள்ளார். கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3-வதாக உருவாகி உள்ளது ‘லைவ் ஆர்ட் மியூசியம்’.உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தைவிட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முன்மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், ...
Read More »விஜய்யின் அடுத்த படத்தில் சாய் பல்லவி
விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி தற்போது தில் ராஜு புரொக்ஷன்ஸ் சார்பில் நானி ஜோடியாக ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து ...
Read More »மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக்கேட்கும் விஜய்!
தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்ட படங்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா முக்கியமான படமாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக் கேட்கிறாராம் விஜய். இந்த படத்தில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்ட அட்லி, தற்போது இரண்டு மகன் விஜய்களின் காட்சிகளை படமாக்கி வருகிறார். அதில் ஒரு விஜய் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அதே மருத்துவமனையில் இன்னொரு டாக்டராக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். ஆரம்பத்தில் ...
Read More »பாகுபலி-2 தமிழகத்தில் வெளியாகிறது!
பாகுபலி-2 படம் வெளியாவதற்கு இருந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் இன்றுமுதல் உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகும் என்ற அறிவிப்போடு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்புடன் நடந்தது. இப்படத்தை காண ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், பட விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ...
Read More »3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’
சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘நாளை நமதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பொன் ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’ படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘நாளை நமதே’ படத்தில் ...
Read More »தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்ஷய் குமார்
தேசிய விருது பெற நான் தகுதியற்றவன் என்றால், அந்த விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்ஷய் குமாரிடம் ...
Read More »ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி
அட்லி ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லி தயாரிப்பில் முதன்முதலாக உருவாகியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிடவுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஐக் என்பவர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சங்கிலி புங்கிலி கதவத்தொற ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அட்லி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவிருக்கும் மேலும் ...
Read More »திருமணம் நெருங்க நெருங்க சமந்தாவுக்கு புது படங்கள்!
சிவகார்த்திகேயன் இப்போது நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த ஜனவரியிலேயே தொடங்கியிருக்க வேண்டியது. வேலைக்காரன் படம் தாமதமானதால் இந்த படமும் தாமதமாகி விட்டது. இப்போது மே மாதம் தொடங்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். மே மாதம் என்றால் சமந்தா கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம், விஷாலின் இரும்புத்திரை படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் இரும்புத்திரை படத்துக்கும் மே மாதத்தில்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இவை தவிர இரண்டு ...
Read More »விவசாயிகளின் போராட்டத்தை சினிமாவாக்கும் இயக்குநர்!
விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்து ’தெருநாய்கள்’ என்ற படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் செ.ஹரி உத்ரா. இதில் அப்புக்குட்டி, பிரதிக், ’கோலிசோடா’ நாயுடு, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அக்ஷதா நடிக்கிறார். படம் பற்றி ஹரி உத்ராவிடம் கேட்டால், ‘இன்றைக்கு விவசாய நிலங்கள் எல்லாத்தையும் கார்பரேட் நிறுவனங்கள் கூறுபோட்டுகிட்டு இருக்காங்க. தஞ்சாவூர்ல மீத்தேன், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள்ல ஹைட்ரோகார்பன்னு நம்ம விவாசாய நிலங்களை ஒண்ணுமில்லாம பண்ணிகிட்டு இருக்காங்க. கார்பரேட்களால் நம்ம விவசாயம் எப்படி பாதிக்கப்படுதுன்னு இந்தப் படத்துல சொல்றோம். ...
Read More »