அவுஸ்ரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதி (சனிக்கிழமை) தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாலை 6 மணிக்கு, St Jude’s Primary School Hall, 53 George St, Scoresby இல் தியாகி தீலீபனின் 30ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுப் பூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பினை விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் விடுத்துள்ளனர் என்பது ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயாராகும் விக்டோரியா மாநில அரசு
தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சுமார் 6 லட்சம் டொலர் நிதியை விக்டோரியா மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு நிதியுதவி மற்றும் தங்குமிட வசதிகளை அண்மையில் அரசு நிறுத்தியிருந்ததோடு, மேலும் இவர்கள் அனைவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தவேலைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதேவேளை விக்டோரியாவில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய வாழ்வாதார உதவிகளுக்காக 6 லட்சம் நிதியினை அரசு ...
Read More »அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முயன்றால்?
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முன்னர் வெளிநாட்டு விமான நிலையங்களில் வைத்து, சந்தேகப்படும்படியான நபர்களை தடுத்து நிறுத்தும் பணியில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் Border Force ஈடுபடுகின்றது. குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, சில சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வருபவர்களை தடுத்தும் நிறுத்தும் பணி தொடர்கிறது. அவுஸ்திரேலிய Border Force-இன் Airline Liaison Officers – சிறப்புப் பிரிவு இயங்கிவருதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார். இதன்மூலம் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவுக்குள் வர முன்னரே தடுத்துநிறுத்தப்பட்டதாக ...
Read More »அவுஸ்ரேலியக் குடியுரிமைச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா?
அவுஸ்ரேலியாவில் குடியுரிமை பெறுவதைக் கடினமாக்கும் அரசின் சட்ட முன்வடிவு, பலரால் மீளாய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை பெற அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அத்துடன் அவுஸ்ரேலிய விழுமியங்கள் குறித்த மேலதி மதிப்பீடு, மற்றும் பல்கலைக்கழக நிலை ஆங்கிலப் பரீட்சையில் தேர்ச்சி என்பன முன்மொழியப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, மற்றும் செனட் சபையில் இதன் எதிர்காலம் குறித்த கேள்வி என்பன இந்த சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »அவுஸ்திரேலியா- கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது!
பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை அவுஸ்திரேலியா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டமா அதிபர் ஜோர்ஜ் பிரான்டிஸ் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையை தொடர்ந்து கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா , பசுபிக்கில் இயங்கும் இரண்டு அமைப்புகளை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பு ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றது என ...
Read More »அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாத 26 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் வைத்திருந்தவர்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் பலர் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்துள்ளனர். அங்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கள்ள துப்பாக்கிகள் இருப்பதாக காவல் துறை கணித்துள்ளனர். இதனால் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமான துப்பாக்கிகளை ஒப்படைப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லாவிடில் ரூ.1 கோடியே 30 லட்சம் அபராதம் மற்றும் 14 ஆண்டு ஜெயில் தண்டனை ...
Read More »அவுஸ்ரேலியாவில் இந்திய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!
கார் மோதி 24 வார சிசு இறந்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செவிலியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அவுஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த டிம்பில் கிரேஷ் தாமஸ் (வயது 32) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் அஷ்லேயா ஆலன் என்ற கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 24 வார கரு கலைந்தது. கிரேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிம்மிற்கு சென்று விட்டு வீட்டிற்கு ...
Read More »ஆட்டிறைச்சி விளம்பரத்தில் பிள்ளையார்!
ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுள்கள் மற்றும் இறை தூதர்கள், விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக அமைந்துள்ளது. இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. இருப்பினும் அனைத்து ...
Read More »அவுஸ்ரேலியாவில் சிறுநீரை குடித்து 140 கி.மீ நடந்த வாலிபர்!
அவுஸ்ரேலியாவில் கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பி வாலிபர் குடிக்க தண்ணீர் இல்லாததால் 140 கி.மீ. வரை சிறுநீரை குடித்து நடந்து வந்தார். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் தாமஸ் மேசன் (21). டெக்னீசியன் ஆன இவர் தனது காரில் அவுஸ்ரேலியாவின் தெற்கு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் குறுக்கே ஒரு ஒட்டகம் திடீரென கடந்து சென்றது. எனவே அதன் மீது மோதாமல் இருக்க அவர் காரை திருப்பினார். அதையடுத்து அக்கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் அப்பகுதிஅவுஸ்ரேலியாவின் மிகவும் ...
Read More »குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 10 இடங்களின் பெயர்கள் மாற்றம்!
குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 10 இடங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்பு நிறமுடையவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் N***** என்ற சொல்லுடன் இந்த இடங்கள் உள்ளது. இதனால் அது ஒரு வகை இன துவேஷத்தை வெளிப்படுத்தி நிற்பதாகவும், இந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இப்பெயர்களை மாற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு தெரிவித்துள்ளது.
Read More »