குமரன்

சஹ்ரானின் பாசறையில் பங்கேற்ற இளைஞன் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டின் கீழ், மற்றுமோர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவல் துறை , பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹாசிமினால் ஹம்பாந்தோட்டையில் நடத்திச் செல்லப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சிகளை சந்தேகநபர் பெற்றுள்ளதாக தெரிவித்த காவல் துறை  ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை  அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ, சந்தேகநபரை தடுத்து ...

Read More »

பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து வெளியான காதல் கீதம்

பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான ‘தரையோடு தூரிகை’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். பாடலின் ...

Read More »

ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார். ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும். உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுகிறது என ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ...

Read More »

“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்”

ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டுநேற்றைய தினம் வியாழக்கிழமை (01.12.21) ” ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்” என திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிலையில் , அது தொடர்பில் பேராசியர் குறிப்பிடும் போதே, அவ்வாறு ...

Read More »

எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்’: அகதிகளுக்காக போராடியவர்கள் குறித்து தமிழ் அகதி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பிலிருந்து என்னுடைய சில நண்பர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றி எங்களது விடுதலைக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கே உரித்தானது. அவர்களின் உதவியை எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்,” என டீவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார் தனுஷ் செல்வராசா எனும் இலங்கைத் தமிழ் அகதி.

Read More »

சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார். இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான். இடையில் பாலா எடுக்கப்போவதாகத் தகவல் வர, இருவருக்கும் கருத்து மோதல் வந்தது. இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு குற்றப்பரம்பரை பற்றி இருவருமே பேசவில்லை. தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் ...

Read More »

ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு

லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர ...

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சி…

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று மாலை (02)ஆரம்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு நீதிவானின் உத்தரவிற்கு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி புலிகள் அமையத் தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டது.எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை இன்றையதினம் (02) வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட ...

Read More »

“தமிழர் தாயகம்” என அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை!

இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதிகள் அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ வேலு குமார் பா.உ அதனை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். கிளப்பப்பட்ட எதிர்ப்புகள் பற்றி அவர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இந்த நாடு ஒரு சிங்கள நாடு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்ற கேள்வின்கு இல்லை. நான் அவ்வாறு ஏற்கவில்லையென தெரிவித்துள்ளார் நா.உ சி.வி.விக்கினேஸ்வரன். முதலில் இது ஒரு சிங்கள நாடல்ல. சிங்களவரைப் ...

Read More »

அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும்  எழுதப்பட்டிருப்பதினால்  அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானதாகவே பார்க்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய  பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ...

Read More »