பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் தண்டனை கொடுப்பதற்காக ஜெயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென்னிந்தியாவுக்கு அறிமுகமான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. நான்கு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 19 பேர் கலந்துகொண்ட இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், வருகிற 17-ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 14 பிரபலங்கள், 60 கேமராக்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்க ...
Read More »குமரன்
சிங்கப்பூர் தமிழ் மந்திரிக்கு வடகொரிய அதிபர் நன்றி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி ...
Read More »நுண்கடன் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ...
Read More »அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு அழிக்கபட்டது!
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 மே மாதம்; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் நான்கு இலட்சத்து தொண்ணூற்றொராயிரத்து முந்நூற்று தொண்ணூற்றெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (491,398sqm ) இருந்து ஜந்தாயிரத்து இருநூற்று பதினான்கு(5214) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ...
Read More »தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு சம்மதம்
திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் மீட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது ...
Read More »தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல!-சுவிற்சர்லாந்து நீதிமன்றம்
14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து. உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)யை ஒரு குற்றவியல் அமைப்பாகக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது. விசாரணையில் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என பெடரல் ...
Read More »தந்தையைப் புதைக்கப் போராடும் மகன்!
24 மணி நேரம் தொடர்ச்சியாக ஒரு கடற்கரையில் அமர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒட்டுமொத்த நாளையும் உங்களால் ரசித்துக்கொண்டே இருக்க முடியுமா? அதிகாலையின் குளிர்க்காற்று, சூரிய உதயத்தின் இளமஞ்சள் வெயில் முகத்தில் அறைய வீசும் மென்காற்று, காலை நேரத்தில் கொஞ்சம் வெயில் ஏறிய நிலை, நடுப்பகலில் சுள்ளென அடிக்கும் வெயிலும் லேசான ஈரக்காற்றும், அஸ்தமன நேரத்து ஈரக்காற்றும், நிலவொளியின் குளிர்ச்சியோடு இரவில் வீசும் குளிர்க்காற்றும் சரி… வெறுமனே வெயிலும் குளிர்ச்சியும் மட்டுமல்ல, கடற்கரையில் விளையாடும் குழந்தைகளும், சுண்டல் விற்கும் சிறுவர்களும், தொல்லை தரும் 1008 விஷயங்களையும் தரிசிக்கலாம். ...
Read More »ட்ரம்ப் எனும் அமெரிக்க ஜமீன்!
பணக்கார வீட்டுப் பையனையோ/பெண்ணையோ பார்த்தால் நீயெல்லாம் யாருப்பா ”Born with Silver Spoon”’னு சொல்லுவாங்க. அமெரிக்காவின் ”Born with Silver Spoon” என்ற வார்த்தைக்குப் பொருத்தமான நபர்களில் டொனால்ட் ட்ரம்ப்பும் ஒருவர். 70களின் மத்தியில் நியூயார்க் நகரம் பெரும் பொருளாதார வீழ்ச்சியிலும், மக்கள் வறுமையிலும் தவித்தனர். ஒரே நாளில் வேலையிலிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகை டொனால்ட் ட்ரம்பிடம் கருத்து கேட்கிறது. “அரசியல்வாதிகளும், தலைவர்களும் தங்கள் மூளையை 1% உபயோகமாக பயன்படுத்தினால் இந்த பிரச்னைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்” என்கிறார் ரியல் எஸ்டேட் ...
Read More »ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திக்காக, பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு தண்டனை வழங்கும் வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக கடந்த மே மாதம் 24ம் திகதி நீதிமன்றால் அறிவிக்கப்பட்டார். அத்துடன் ...
Read More »பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்!
அவுஸ்திரேலியாவில் பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடல் பகுதியில் நண்பர்கள் இருவர் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த பகுதி பாறை என்பதால் அதனுள் பாய்ந்து செல்லும் அலை மீண்டும் வாரிச் சுருட்டி கடலுக்குள் செல்லும். அதில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அலையால் இழுக்கப்பட்டு மீண்டும் பாறைப் பகுதிக்கு வந்துவிட்டார். அடுத்த அலையின் போது மற்றொரு நண்பர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காணாமல் போனவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் , கடலோர ...
Read More »