தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த தினத்தை விடுமுறைய தினமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Read More »குமரன்
தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்!
தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன. இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி அரசியல் ஊடாகச் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்படும் அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாடான காழ்ப்புணர்ச்சி கருத்துகள், சர்வதேச ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் ...
Read More »இரவில் ஒளிரும் அரிய வகை தேரை!
இரவில் ஒளிரும் அரிய வகை பூசணி தேரைகளை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பகலில் அந்த தேரையின் நிறம் பூசணிக்காயின் உள்ளே இருப்பது போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் (அல்ட்ரா வயலட்) அந்த தேரையின் உடலில் உள்ள புள்ளிகள் அடர் நீலத்திலும், மற்ற பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மின்னுகின்றன. குறுகிய ஒளி அலைகளை உள்வாங்கி பின் அவற்றை நீண்ட ஒளி அலையாக வெளியேற்றுவது அறிவியலில் ஒளிரும் தன்மை (புளோரசென்ட்) என்றழைக்கப்படுகிறது. இரவில் அல்லது ...
Read More »புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா!
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா, தற்போது புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கதாநாயகிகள் பெரும்பாலும் தங்கள் உடல்தோற்றம் குண்டானால் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள். அவர்களிடம் இருந்து பாவனா மாறுபட்டு இருக்கிறார். சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பாவனா கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார். அதன்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை காதல் ...
Read More »ஆஸ்திரேலிய தமிழ் அகதி புற்றுநோயால் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த சிவகுரு நவநீதராசா இரத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு தமிழ் ஏதிலிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜன் என நண்பர்களிடையே பரவலாக அறியப்படும் சிவகுரு நவநீதராசா, 2009 போருக்கு பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். அப்போது அவரை கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைத்த ஆஸ்திரேலிய அரசு, பின்னர் வில்லாவுட் தடுப்பு முகாமிற்கு மாற்றியது. அதன் பிறகு, ...
Read More »வியாபார நிலையங்கள் அப்புறப்படுத்தப்படும் ; யாழ்.மாநகர முதல்வர் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை எதிர்வரும் ஏப்ரல் 30 க்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமக்கு முன்னர் மாற்றிடங்கள் வழங்கப்படுமென கூறிய முதல்வர் தற்போது மாற்று இடம்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தை நீங்களே பாருங்கள் என தெரிவித்ததையிட்டு தாம் கவலை அடைவதாக அங்காடி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பில் அங்காடி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எமது சங்கத்தினரை அழைத்த யாழ். முதல்வர் உங்களுக்கு இடம் ஒதுக்கி ...
Read More »முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு!
முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் அதிபராக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தல், நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா குறிப்பிட்டார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் ...
Read More »மஹிந்தவின் பலவீனத்தின் வெளிப்பாடு?
கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான செய்திகள், ஊடகங்களில் அடிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், “அப்படியான முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று, குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர், கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவு எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். “வெற்றிபெறக் கூடிய வேட்பாளரைத் ...
Read More »சுமந்திரனின் முதலைக் கண்ணீர்!
நிறைவடைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளாரெனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி, சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டுமென்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோமெனவும் சுமந்திரன் கூறியமை, முதலைக் கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானதென்றும் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முடிந்தால், ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு – செலவுத் திட்ட ...
Read More »ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக தப்பமுயன்ற பிரித்தானியர்!
ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக பப்பு நியூ கினியாவுக்கு தப்பமுயன்ற 57 வயது பிரித்தானியரான டேவிட் ஜேம்ஸ் ஜேக்சன் ஆஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபடகில் வில் அம்புடன் சுமார் 150 கி.மீ. பயணித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பப்பு நியூகினியாவுக்கு செல்ல 4 கி.மீ. மட்டுமே இருந்த சூழல் அவர் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார். மேற்கு ஆஸ்திரேலியாவில் போதை மருந்து தொடர்பான வழக்கில் இவர் மீது ஏற்கனவே கைதாணை இருந்துள்ளது. இவ்வாறான சூழலில் தப்பிய ஜாக்சன், ஆஸ்திரேலியாவில் அவர் பயன்படுத்திய காரில், “நான் புதன்கிழமைக்குள் வரவில்லை ...
Read More »