குமரன்

கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு: ‘அரசியல் பிரசாரம்’

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீசு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலிய அரசின் முடிவு தஞ்சக்கோரிக்கையாளர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தும் அரசியல் ரீதியான பிரசார செயல் என முன்னாள் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியும் குர்து பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி விமர்சித்துள்ளார். முன்பு, மனுஸ் தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர் ஜூலை 2019 நியூசிலாந்து பயணத்திருந்த நிலையில் சமீபத்தில பூச்சானியின் தஞ்சக்கோரிக்கை நியூசிலாந்தில் ஏற்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு ஒரு மாதக் காலம் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்த பூச்சானி, ...

Read More »

அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் ...

Read More »

ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கம்

தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார். நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். ...

Read More »

கடந்த 10 ஆண்டுககடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்ளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்

கேரளாவில் நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த ஒரு அலசலை காண்போம். வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து ...

Read More »

சுப்பிரமணியன் சுவாமிக்கு மகிந்த அழைப்பு

சிறிலங்கா  பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சுப்பிரமணியன்சுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்காவில்  புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அவர் தனது பதவியேற்பு நிகழ்வில் நாளை கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாக என்னால் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது எனினும் எதிர்காலத்தில் நான் அங்கு ...

Read More »

ரணில் நாடாளுமன்றம் செல்வாரா?

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்வாரா என்ற கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள கட்சியின் பொதுசெயலாளர் அகிலவிராஜ் காரியவசம் திங்கட்கிழமை இது குறித்த இறுதிமுடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதேவேளை தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பும் பாரம்பரியம் கட்சிக்கு இல்லை என வஜிரஅபயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டார் தோல்வியடைந்த பின்னர் நாடாளுமன்றம் ...

Read More »

முன்னாள் அமைச்சர்கள் 70 பேரின் நிலை என்ன?

இம்முறை நடைபெற்ற 9 ஆவது நாடாளுமன்றத் தேர் தலில் 70 க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் 23 க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களே இவ்வாறு தோற்கடிக்கப் பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ரணி ல் விக் கிர மசிங்க, ரவி கருணநாயக்க, அகில விராஜ் கரிய வசம், நவீன் திசான நாயக்க, வஜிரா அபேவர் தன, தயா கம கே, ருவான் விஜவர் தன, அர்ஜுன ரண துங்க, ...

Read More »

தமிழர் மீண்டும் அரசியல் அநாதைகளாக………

திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்களஉறுப்பினர்களம் மொத்தமாக எழுவர் நாடாளுமன்றிற்குத் தெரிவாகியுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தேசிய காங்கிரஸ் 38911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுரன சார்பில் விமலவீர திசாநாயக்க 63594 வாக்குகளையும் வீரசிங்க 56006 ...

Read More »

145 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கின்றது பொது ஜன பெரமுனை

பொதுத் தேர்தலில் 145 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம்

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை ஆஸ்திரேலிய எல்லைப்படை உறுதிச்செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் இத்தீவில் உள்ள முகாம் திறக்கப்படுவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள இட நெருக்கடி பிரச்னையை சமாளிக்க இயலும் என ஆஸ்திரேலிய எல்லைப்படை கருதுகின்றது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எல்லைகள் .மூடப்பட்டிருப்பதாலும் சர்வதேச விமானங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும் தடுப்பில் உள்ள வெளிநாட்டினரை நாடுகடத்துவது .தடைப்பட்டிருப்பதாக எல்லைப்படை தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தடுப்பு முகாம்களில் ...

Read More »