குமரன்

ஸ்கைடைவ் செய்த இருவர் பலி!

சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் skydive செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் யார் என்ற அடையாளத்தை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. 60 வயதான ஒருவரும் 20 வயதான இன்னொருவரும் Picton என்ற skydive செய்வதற்குப் பிரபலமான இடத்திலிருந்து, இந்த சாகசச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, Wilton Park Road இலுள்ள ஒரு காணியில் வீழ்ந்ததில் ஏற்பட்ட தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

Read More »

ஐபோன் 8 வடிவமைப்பு வெளியானது!

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையி்ல், அதன் வடிவமைப்பு சார்ந்த புதிய தகவல்கள் அப்பிள் விநியோகஸ்தர்களிடம் இருந்து கசிந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 2017 வடிவமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இம்முறை கசிந்துள்ள தகவல்கள் ஃபோர்ப்ஸ் மூலம் வெளியாகியுள்ளது. ஐபோன் கேஸ் வடிவமைப்பாளரான நொடஸ்-இல் பணியாற்றி வந்த ஃபோர்ப்ஸ்-இன் கார்டன் கெல்லி ஐபோன் 8 வடிவமைப்பு தகவல்களை ஒருங்கிணைத்துள்ளார். இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் ...

Read More »

குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் ஓவியா..!

புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த, குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் த்ரில்லர் கதையாக ஓவியா படம் உருவாகி வருகிறது. இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கிவரும் இந்த படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் ...

Read More »

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை தரவுள்ளார்!

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் சிறிலங்கா வருகை தரவுள்ளார். சிறிலங்கா வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அவுஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அவர் அறிவிக்கவுள்ளார். மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் அவர் ...

Read More »

மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம்!

டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சியால் (ரெலோ)    கோரப்பட்டதற்கு அமைய  அக்கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் குறித்த முடிவு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதே வேளை பரவலாக வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கல்வி  அமைச்சு சர்வேஸ்வரனுக்கும் மகளிர் ...

Read More »

வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் லேப்டாப் அறிமுகம்

டெல் நிறுவனத்தின் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்பேஸ் ப்ரோ லேப்டாப் போன்று காட்சியளிக்கும் டெல் 7285 வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும். டெல் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் பார்க்க மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்லெட் மற்றும் கழற்றக் கூடிய கீபோர்டு கொண்டுள்ள புதிய ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 11-ம் திகதி தொடங்கின. இப்போட்டியின் இறுதி ஆட்டம் 16-ம் திகதி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்துவும் முதல்நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸ்சும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டில் அவுஸ்ரேலிய வீரர் 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி ...

Read More »

சிபிராஜ் படம் படைத்த புதிய சாதனை!

 வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது நடித்து வரும் `சத்யா” படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார். யோகி பாபு, சதீஷ் நடிப்பில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ...

Read More »

அவுஸ்ரேலியா அருகே டோங்கா தீவில் மிதமான நிலநடுக்கம்

அவுஸ்ரேலியா (17) அருகே அமைந்துள்ள டோங்கோ தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அவுஸ்ரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு டோங்கா. இன்று அதிகாலை அந்த நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சாலைகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. இது குறித்து வானிலைஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...

Read More »

நிரூபித்தால் பதவி விலகுவேன்!-சிறீதரன்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். கிளிநொச்சி குணாவில் பகுதியில் நேற்று மலையக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால் அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் ...

Read More »